மயிலாடுதுறை அடுத்த சோழம்பேட்டையில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோழிகுத்தி வானமுட்டி பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஒரே அத்தி மரத்தில் 14 அடியில் விஸ்வ ரூபத்தில் சீனிவாச பெருமாள் அருள்பாலித்து வருகிறார். இந்நிலையில் இக்கோயிலில், தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் இன்று சிறப்பு தரிசனம் மேற்கொண்டார். கோயிலில் அவருக்கு பூரணகும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. 




அதனைத் தொடர்ந்து பெருமாள் சன்னதியில் தனது பெயரிலும், தனது குடும்பத்தினர் பெயரிலும் அர்ச்சனை செய்த தமிழிசை செளந்தரராஜன், பிரதமர் நரேந்திர மோடியின் பெயரிலும் அர்ச்சனை செய்து சிறப்பு வழிபாடு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தராஜன் கூறியதாவது:


விஞ்ஞானத்துக்கு வழிகாட்டியதே மெய்ஞானம்தான். 9 கோள்கள் உள்ளன என்று விஞ்ஞானம் கண்டறிந்ததற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே கோயில்களில் நவக்கிரகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. எனவே, ஆன்மீகம் பாதுகாக்கப்பட வேண்டும். 


Kohli Catch Viral: பீல்டிங்கிலும் கிங் என நிரூபித்த கோலி.. ஒற்றைக் கேட்ச்சால் புதிய சாதனை படைத்த விராட்!




ஆன்மீக ரீதியான எதிர் கருத்துக்கள் தமிழகத்தில் பரப்பப்படுகிறது. பெரும்பான்மை மக்கள் உணர்வுப்பூர்வமாக மேற்கொள்ளும் மதவழிபாட்டை தமிழகத்தில் தொடர்ந்து நிந்திப்பதும், உதாசீனப்படுத்துவம், பரிகசிப்பதும் அதிகரித்துள்ளது. இது தடுக்கப்பட வேண்டும்.


இது கருத்துச் சுதந்திரம் என சொல்லும் நிலையில், தமிழக அரசுக்கு எதிராக ஏதேனும் பதிவிட்டால் அவர்கள் கைது செய்யப்படுகின்றனர். எனவே, கருத்து சுதந்திரம் பற்றி இவர்கள் சிந்திப்பதில்லை. ஆனால், இந்து மதத்தைப் பற்றியும், ஆன்மீகத்தைப் பற்றியும், சனாதனத்தைப் பற்றியும் தவறான கருத்துக்கள் பரப்பப்படுகிறது. 




சனாதனம் என்பது வாழ்க்கை முறை. அதனை டெங்குவைப் போல் ஒழிப்போம் என்று சொல்பவர்களால் டெங்குவையே ஒழிக்கமுடியவில்லை. மற்ற மதங்களின் வழிபாட்டு முறைகளைப் பற்றி நீங்கள் விமர்சிப்பீர்களா? தமிழகத்தில் பல குடமுழுக்குகளை நடத்தியதாக கூறும் தமிழக முதல்வர், அதில் ஒன்றில் கூட பங்கேற்கவில்லை. காவிரிப் பிரச்னை சுமூகமாக தீரக்கப்பட வேண்டும். விவசாயிகளை கர்நாடக விவசாயிகள், தமிழக விவசாயிகள் என பிரித்துப் பார்க்கக் கூடாது. கர்நாடகாவில் காவிரி நீர்ப் பிரச்னையை ஆளும்கட்சிதான் கையாள வேண்டும். எதிர்கட்சிகள் போராட்டம் செய்வதாக சொல்வது எவ்வாறு நியாயமாக இருக்கும்.


CM Stalin:ஆசிய விளையாட்டில் அசத்தல்; "உலக அரங்கில் பெருமிதம் பொங்கச் செய்த தமிழ்நாடு வீரர்கள்” - முதலமைச்சர் ஸ்டாலின்




காவிரி நதி நீர் பிரச்சினைக்கு சட்டரீதியாக உச்சநீதிமன்றம் செல்வதாக சொல்லும் தமிழக அரசு இப்பிரச்னையை நட்பு ரீதியாக எதிர்கொள்ள வேண்டும். நாங்கள் அமைத்துள்ளது வெற்றிக்கான கூட்டணி அல்ல. கொள்கை கூட்டணி என தமிழக முதல்வர் சொல்கிறார். இந்தி எதிர்ப்பு, ஆன்மீக எதிர்ப்பு, சனாதன எதிர்ப்பு போன்ற கொள்கைகளை அனைவரும் ஏற்றுக்கொள்வார்களா? அனைவருக்கும் தண்ணீர் தர வேண்டும் என்ற கொள்கையை ஏற்றுக் கொள்ளாதபோது கொள்கை எங்கு போனது’’


இவ்வாறு ஆளுநர் தமிழிசை தெரிவித்தார்.