மதுரையில் அ.தி.மு.க., முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ மதுரை அரசு மருத்துவமனைப் பகுதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் பேட்டியளிக்கையில், "எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் அ.தி.மு.க.வுக்கு கிடைத்த அருமையான தலைவராக எடப்பாடி பழனிசாமி உள்ளார். அ.தி.மு.கவினர் அவரை பல வடிவங்களில் ரசிக்கிறார்கள். எடப்பாடி மீண்டும் முதல்வராவில்லையே என மக்கள் வருத்தப்படுகிறார்கள். தமிழகத்தில் எங்கு சென்றாலும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு கிடைத்த வரவேற்பு எடப்பாடி பழனிசாமிக்கு கிடைக்கிறது" என்றார். அ.தி.மு.க., பாஜக கூட்டணி இறுதி உறுதி என சொல்ல முடியாது என அண்ணாமலை பேசியது குறித்த கேள்விக்கு, “அண்ணாமலை அவருடைய கருத்தை சொல்லி உள்ளார். தன் கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்த அவ்வாறு பேசி உள்ளார். எல்லா இடங்களிலும் தொண்டர்களை உற்சாகப்படுத்த இவ்வாறு பேசுவதுண்டு” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “அண்ணாமலையின் பேச்சு எங்களுக்கு வேத வாக்கு அல்ல. எங்களுக்கு எடப்பாடி பழனிசாமியின் வாக்கு வேதவாக்கு. ஒருகட்சியை வளர்க்க என்ன பேச வேண்டுமோ அதை பேசியுள்ளார் என்று தான் எடுத்துக்கொள்ள வேண்டும். தேர்தல் எங்கோயோ உள்ளது. அவர்கள் கட்சிக்குள் பேசியது. அதற்கு கருத்து சொல்ல முடியாது. அண்ணாமலை அவரின் கருத்தை தெரிவித்துள்ளார். அமித்ஷா மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி தொடரும் என கூறியுள்ளனர். 9 நாடாளுமன்ற தொகுதிகளில் பாஜகவை வெற்றி பெற வைக்க வேண்டும் என எல்.முருகன் அண்ணாமலை பேசியுள்ளது குறித்த கேள்விக்கு, நாடாளுமன்ற தேர்தலுக்கும் இன்னும் எவ்வளவோ காலம் உள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி மற்றும் இடங்கள் ஒதுக்கீடு குறித்து தேர்தல் நடைபெறும் நேரத்தில் அறிவிக்கப்படும்.
பா.ஜ.க., அ.தி.மு.க., கூட்டணி தொடரும் என்பது குறித்து அமித்ஷா மற்றும் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளனர். தோழமை குறித்து நட்டாவும், அமித்ஷாவும் கூறிவிட்டனர். எங்கள் கருத்தை கேட்பதில் ஒன்றுமில்லை. தோழமைக்குள் சிண்டு முடிய வேண்டாம் என பேசினார். காவல்துறையினர் பல்-லை பிடுங்குவது குறித்து ஆளும் திமுக ஆட்சியை கேட்க வேண்டும். காவல்துறை ரவுடி போலீசாக மாறக்கூடாது நல்ல போலீசாக இருக்க வேண்டும். சட்டமன்றத்தில் பேசும்போது தனது பேச்சினை கேலி செய்வதை பார்க்க வேண்டியது இல்லை. ஆனால், அதன் மூலம் மதுரையில் பல்வேறு பலன்கள் கிடைக்க உள்ளது.
மருத்துவ வசதியில் சென்னைக்கு அடுத்த கட்டமாக மதுரையில் மருத்துவ வசதி உள்ளது கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக இதனை கொண்டு வந்துள்ளது. மதுரையில் 24 மணி நேரம் குடிநீர் திட்டம் வர இருக்கிறது.
மதுரையில் பறக்கும் பாலம் வரவுள்ளது மொத்தமாக 4 பாலங்கள் வரவுள்ளது. இவை அனைத்தும் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள். கடந்த ஐந்து வருடங்களில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் என்ன செய்துள்ளார் என்பதை மக்கள் பார்த்துள்ளனர். நடிகரை அழைத்து வந்து மக்களை வெயிலில் காக்க வைத்ததை மக்கள் பார்த்து வருகின்றனர். சு.வெங்கடேசன் நடிகர்களை அழைத்து வந்து சீன் காட்டுகிறார். சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் அதிமுகவில் இருந்து விலகியது குறித்து வருத்தம் என எந்த சூழ்நிலையில் பேசினார் என தெரியவில்லை அவர் தோழமைக் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் எனவே அவரை அழைப்பது குறித்து எடப்பாடி பழனிச்சாமி முடிவு எடுப்பார். அவர் அதிமுக இந்தக்கட்சியில் உழைத்தவர். கட்சி அவருக்கு உரியதை செய்துள்ளது. அவர் நன்றி உணர்வோடு பேசியுள்ளார்” என கூறினார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Madurai: மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் நாட்டுப்புறக் கலைகளுக்கான 'அன்றில் திருவிழா' - குவியும் பாராட்டு
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்