தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் பிறந்தநாளன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.


ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு இன்று 71-வது பிறந்தநாள். இந்நிலையில், அவருக்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.


முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து:




முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ஆளுநர் ஆர்.என். ரவிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார். மேலும், நீண்ட ஆயுளோடு, ஆரோக்கியமாக வாழ வாழ்த்துகள் என்று  குறிப்பிட்டுள்ளார்.


தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து 


தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தனது வாழ்த்துச் செய்தியில், “ தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எனது மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். பூரண உடல் ஆரோக்கியத்தோடு நீண்ட ஆயுளுடன் மக்கள் பணியாற்ற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.”  என்று குறிப்பிட்டுள்ளார்.


பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து


கே.அண்ணாமலை தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, நீண்ட ஆயுளுடனும் நிறைவான ஆரோக்கியத்துடனும் தேசப் பணி தொடர, தமிழக பாஜக சார்பாக இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.


யார் இந்த ஆர்.என்.ரவி?



  • பீகார் மாநிலம் பாட்னாவை பூர்விகமாக கொண்ட ஆர்.என்.ரவியின் முழுப்பெயர் ரவீந்திர நாராயண் ரவி. 1976 ஆம் ஆண்டு கேரள பிரிவு ஐ.பி.எஸ். அதிகாரியாக இருந்தவர்.

  • இவர் மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ.-யிலும் பணிபுரிந்துள்ளார். 

  • மத்திய அரசின் உளவுப்பிரிவான IB-யிலும் பணியாற்றிய இவர், காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் வன்முறையை முடிவுக்கு கொண்டு வரும் பணிகளில் ஈடுபட்டுள்ளார். 

  • 2012-ஆம் ஆண்டு காவல் துறையிலிருந்து ஓய்வு பெற்றார்.

  • பின்னர், பிரதமர் அலுவலகத்தில் உளவுப் பிரிவுத் தலைவராக நியமிக்கப்பட்டார். 

  • கடந்த 2018-ம் ஆண்டு தேசிய துணை பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டார். 

  • 2019-ஆம் ஆண்டு நாகலாந்து ஆளுநராக நியமிக்கப்பட்டார். 

  • இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாட்டின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். 


ஆர்.என். ரவியும் சர்ச்சைகளும்:


ஆளுநர் ஆர்.என்.ரவி பல மேடைகளில் பேசி சர்ச்சையை ஏற்படுத்தியது. நாட்டை குடும்பமாக பார்க்க வேண்டும்; பகுதி வாரியாகவும் மொழி வாரியாகவும் மத வாரியாகவும் பிரித்து பார்க்க கூடாது என்று பல சர்ச்சையான கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். 


நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கை, மும்மொழி கொள்கை, திராவிட கொள்கை, சனாதனம் என்று தொடர்ச்சியாக இவர் தெரிவிக்கும் கருத்துகள் சர்ச்சைக்குளாகின. தமிழ்நாட்டின் ஆளுநராக மட்டும் செயல்படாமல், ஆர்.எஸ்.எஸ்.-ன் பிரதிநிதியாக செயல்படுவதாக இவர் மீது அதிருப்தி கருத்துகள் எழுந்தன.




மேலும் வாசிக்க..


AIADMK: அதிமுக வழக்கில் மேல்முறையீடு செய்த ஓபிஎஸ் .. "இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது” என சொன்ன உயர்நீதிமன்றம்


IPL 2023: ஃப்ரீயா மெட்ரோல இன்னைக்கு மஜாவா போங்க.. ஐபிஎல் ரசிகர்களுக்கு சிஎஸ்கே கொடுத்த ஆஃபர்..!