லக்கி பாஸ்கர்
தீபாவளியை முன்னிட்டு இன்று திரையரங்கில் வெளியாகியிருக்கும் படங்களில் ஒன்று லக்கி பாஸ்கர். துல்கர் சல்மான் நாயகனாக நடித்துள்ள இப்படத்தை வெங்கி அட்லுரி இயக்கியுள்ளார். இவர் முன்னதாக தனுஷ் நடித்த வாத்தி படத்தை இயக்கியவர். மீனாக்ஷி செளதரி , ஐஷா கான் , ஹைபர் ஆதி உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஜி.வி பிரகாஷ் இப்படத்திற்க் இசையமைத்துள்ளார் . லக்கி பாஸ்கர் படத்தைப் பற்றி விமர்சகர்கள் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்பதை இந்த ட்விட்டர் விமர்சனத் தொகுப்பில் பார்க்கலாம்.
லக்கி பாஸ்கர் ட்விட்டர் விமர்சனம்
பீரியட் க்ரைம் த்ரில்லர் படமாக உருவாகியிருக்கும் லக்கி பாஸ்கர் திரைப்படத்தின் படம் தொடங்கியது முதல் இடைவேளை வரை செம சுவாரஸ்யமாக உருவாகியுள்ளதாக ஒருவர் கூறியுள்ளார். ஒவ்வொரு காட்சியும் கதையில் சுவாரஸ்யத்தை கூட்டிக்கொண்டே போவதாகவும் துல்கர் சல்மானின் நடிப்பு இந்த கதைக்கு மேலும் வலுசேர்க்கும் விதமாக அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஜி.வி பிரகாஷின் பின்னணி இசை படத்திற்கு சாதகமாக அமைந்துள்ளது.
இரண்டாம் பாதி
இந்தியில் வெளியான Scam 1992 வெப் சீரிஸ் கதை போல பொருளாதார மோசடியை மையப்படுத்தி அமைந்துள்ள கதைதான் லக்கி பாஸ்கர். ஆரம்பத்தில் இருந்து க்ளைமேக்ஸ் வரை நன்றாக ஆய்வு செய்யப்பட்டு அதை சரியான திரைக்கதையாக படத்தின் இயக்குநர் மாற்றியுள்ளார். ஒரு சில காட்சிகளில் கொஞ்சம் போர் அடிக்கும் படி உள்ளது. மற்றபடி புத்திசாலித்தனமான குற்றங்கள் பற்றிய படங்களை பார்க்க விரும்புவர்களுக்கு இந்த தீபாவளி லக்கி பாஸ்கர் ஒரு நல்ல பொழுதுபோக்காக இருக்கும் என்று ஒருவர் தெரிவித்துள்ளார்.
லக்கி பாஸ்கர் படத்திற்கு அனைத்து தரப்பினரிடம் இருந்தும் பாசிட்டிவான விமர்சனங்களே கிடைத்துள்ளன. இந்த தீபாவளிக்கு வெளியாகியிருக்கும் படங்களில் லக்கி பாஸ்கர் திரைப்படம் நிச்சயமாக ப்ளாக்பஸ்டர் வெற்றிபெறும் என்று அனைவரும் உறுதியளித்துள்ளார்கள்.