கர்ப்பிணி பெண்களுக்கு உணவு பரிமாறிய அமைச்சர்.. கூடவே அமர்ந்து சாப்பிட்ட நெகிழ்ச்சி சம்பவம்!

Senthil Balaji : கரூரில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் 300 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சீர்வரிசை வழங்கி அவர்களுடன் உணவு பரிமாறி சாப்பிட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி

Continues below advertisement

கரூரில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் கர்ப்பிணி பெண்களுக்கு உணவு பரிமாறி, தானும் உணவருந்திய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி.

Continues below advertisement

 

கரூரில் சமூக நலத்துறையின் சார்பாக கரூர் அட்லஸ் கலையரங்கத்தில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் 300 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சீர்வரிசை பொருட்களுடன் சமுதாய வளைகாப்பு மற்றும் பட்டப் படிப்பு முடித்த மகளிர் 10 மற்றும் 12ஆம் வகுப்பு முடித்த மகளிர்களுக்கு நிதி உதவி மற்றும் தாலிக்கு தங்கம் உள்ளிட்ட நிகழ்ச்சியில் 98 மகளிர்க்கு 1.18 கோடி மதிப்பிலான நிதி உதவிகளையும் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழக மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி சமுதாய வளைகாப்பு மற்றும் தாலிக்கு தங்க வழங்கும் நிகழ்ச்சி பயனாளிகளுக்கு வழங்கினார்.அதைத் தொடர்ந்து கர்ப்பிணி தாய்மார்களுக்கு உணவு பரிமாறி, தானும் சமுதாய வளகாப்பில் கலந்து கொண்ட கர்ப்பிணி பெண்களுடன் உணவருந்தி சிறப்பித்தார்.கரூரில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அவர்கள் 223 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.1.25 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

 

தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் சார்பில் 52 பயனாளிகளுக்கு ரூ.8.20 இலட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில், மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நலத்திட்டங்களை வழங்கினார்.

இதையும் படிங்க: விருதுநகர் மக்களே.. போக்குவரத்தில் மாற்றம்.. இனி வந்த வழியா தான் போக வேண்டும் !

இந்நிகழ்ச்சியில், பயனாளிகளுக்கு இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், திறன்பேசிகள், இயற்கை மரணத்திற்க்கான உதவித் தொகை, வங்கிக்கடன் மானியம், பட்டப் படிப்பு உதவித் தொகை, மோட்டார் பொருந்திய தையல் இயந்திரம் மற்றும் பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி வழங்கினார்.    

பின்னர் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறையின் சார்பாக சிறுபான்மையினர் உரிமைகள் தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் கிறித்துவ மகளிர் உதவும் சங்கத்தின் சார்பாக தையல் இயந்திரங்கள், உழவர் நலவாரிய உறுப்பினர் அட்டை, கிறிஸ்துவ பணியாளர் நலவாரிய உறுப்பினர் அட்டை வழங்கினார்.

இதையும் படிங்க: Tirutani Market: திருத்தணி மார்க்கெட்டுக்கு முன்னாள் முதலமைச்சர் பெயர்.! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் சார்பில் 52 பயனாளிகளுக்கு ரூ.8.20 இலட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Continues below advertisement