Tirutani Market: திருத்தணி மார்க்கெட்டுக்கு முன்னாள் முதலமைச்சர் பெயர்.! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு
Tirutani Market Kamarajar: திருத்தணி மார்க்கெட்டிற்கு, முன்னாள் முதலமைச்சர் காமராஜர் பெயர் சூட்டப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

திருத்தணி மார்க்கெட்டுக்கு, தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சருமான , காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான காமராஜர் பெயர் சூட்டப்பட்டும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. திருத்தணி நகராட்சியில் ரூ. 3.02 கோடியில் 97 புதிய கடைகளுடன் புதிய மார்க்கெட் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டானது, விரைவில் திற்க்கப்படும் எனவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
திருத்தணி மார்க்கெட்:
திருத்தணியில் 50 ஆண்டுகளுக்கு மேலாக காய்கறி சந்தையானது செயல்பட்டு வருகிறது. இங்கு, ரூ 3.02 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. ஏற்கனவே காமராஜர் பெயர் இருந்ததாகவும், விரிவாக்கத்திற்கு பிறகு காமராஜர் பெயர் சூட்டப்படுவதாக தகவல் வெளியானது.
மேலும், சில தினங்களுக்கு முன்பு திருத்தணி மார்க்கெட்டிற்கு , கலைஞர் கருணாநிதி பெயர் சூட்ட நகராட்சி நிர்வாகம் முடிவு எடுத்து உள்ளதாகவும் கூறப்பட்டது.
இதனால், பலரும் எதிர்ப்புகள் தெரிவிக்க ஆரம்பித்தனர். பெருந்தலைவர் காமராஜர் பெயரை மாற்றக் கூடாது என்றும் தமிழக அரசு கோரிக்கைகள் வைக்க ஆரம்பித்தனர்.
Also Read: சிபிஎஸ்இ படித்தால் அரசு வேலை கேட்காதீர்கள்- உயர்நீதிமன்றம் காட்டம்: எதற்காக இப்படி சொன்னது?
பெருந்தலைவர் காமராஜர் பெயர் அறிவிப்பு:
சில தினங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் முதலமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்பட்டதாகவும், பாமக தலைவர் அன்புமணியும் , பெயர் மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
இந்த தருணத்தல் , தமிழ்நாடு அரசு சார்பில் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அதில் , திருத்தணி மார்க்கெட்டிற்கு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் முதலமைச்சர் காமராஜர் பெயர் சூட்டப்படும் என்றும் , விரைவில் இந்த மார்க்கெட் திறக்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read: Hydrogen Train: இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில்: எங்கே?, சிறப்பம்சங்கள் என்ன?
”முதலமைச்சருக்கு நன்றி”
இந்நிலையில், இதற்கு தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அவர் பதிவில் குறிப்பிட்டருப்பதாவது”
திருத்தணியில் நீண்டகாலமாக செயல்பட்டு வருகிற பெருந்தலைவர் காமராஜர் பெயரில் உள்ள சந்தையை, கலைஞர் காய்கறி அங்காடி என பெயரை மாற்ற திருத்தணி நகராட்சி நிர்வாகம் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது. ஏற்கனவே பெருந்தலைவர் காமராஜர் பெயரில் இருப்பதை மாற்ற வேண்டாமென தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு கோரிக்கை வைத்தோம்.
அதனை ஏற்று இன்று மேற்படி காய்கறி அங்காடி, பெருந்தலைவர் காமராஜர் பெயரில் இயங்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அரசாணை வெளியிட்டு, பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்து இருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.
அரசாணையை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வரவேற்று, முதல்வர் அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.