விருதுநகர் கர்மவீரர் காமராஜர் புதிய பேருந்து நிலையம் முதல் நந்தா ஹோட்டல் முதல் ஆத்துப்பாலம் வரை பயணிகள் பேருந்து (அரசு மற்றும் தனியார் பேருந்து) No-entry ஆக மாற்றம் செய்யப்பட்டுள்ளது - மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்.
போக்குவரத்து மாற்றம்
விருதுநகர் நகரின் மேற்கு மற்றும் தெற்கு பகுதியில் இருந்து வரும் அனைத்து பேருந்துகளும் நந்தா ஹோட்டல் சர்வீஸ் ரோடு மற்றும் எம்.ஜி.ஆர் சாலை வழியாக கர்மவீரர் காமராஜர் புதிய பேருந்து நிலையம் வந்து, அங்கிருந்து கோவில்பட்டி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் எம்.ஜி.ஆர் சாலை வழியாகவும், மதுரை செல்லும் பேருந்துகள் எம்.ஜி.ஆர் சிலை ஆத்துப்பாலம் டி.டி.கே ரோடு வழியாகவும், அருப்புக்கோட்டையில் இருந்து இராஜபாளையம் செல்லும் அனைத்து பேருந்துகளும் எம்.ஜி.ஆர் சிலை, புதிய பேருந்து நிலையம், எம்.ஜி.ஆர் சாலை வழியாகவும், இராஜபாளையத்தில் இருந்து அருப்புக்கோட்டை, இராமநாதபுரம், இராமேஸ்வரம், செல்லும் பேருந்துகள் எம்.ஜி.ஆர் சாலை வழியாக, புதிய பேருந்து நிலையம் வந்து எம்.ஜி.ஆர் சிலை வழியாக அருப்புக்கோட்டை மேம்பாலம் வழியாகவும், பழைய பேருந்து நிலையம் செல்லும் அனைத்து பேருந்துகளும் எம்.ஜி.ஆர் சிலை, ஆத்துப்பாலம், டி.டி.கே ரோடு வழியாக செல்ல வேண்டும். பழைய பேருந்து நிலையத்திலிருந்து வரும் அனைத்து பேருந்துகளும் மீனாம்பிகை பங்களா வழியாக வரும் மதுரை- சிவகாசி பேருந்துகளும் டி.டி.கே ரோடு,ஆத்துப்பாலம், எம்.ஜி.ஆர் சிலை வழியாக புதிய பேருந்து நிலையம் வந்து, அங்கிருந்து மேற்கு மற்றும் தெற்கு செல்லும் பேருந்துகள் எம்ஜிஆர் சாலை வழியாக செல்ல வேண்டும்.
இதையும் படிங்க: களத்திற்கு வந்த கோத்ரேஜ்.. 1000 பேருக்கு வேலைவாய்ப்பு.. சென்னை, செங்கல்பட்டுக்கு ஜாக்பாட்..
சிரமம் குறையும்
கிழக்கு பகுதிக்கு செல்லும் அருப்புக்கோட்டை மற்றும் அருப்புக்கோட்டை மார்க்கமாக செல்லும் பேருந்துகள் எம்ஜிஆர் சிலை, மேம்பாலம் வழியாக செல்ல வேண்டும். இதனால் புதிய பேருந்து நிலையம் மேலும் சிறப்பாக செயல்படவும், வாகன விபத்துகளை தடுப்பதற்கும், போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கும், பள்ளி மாணவ மாணவிகளின் இடையூறு இன்றி செல்வதற்கும் பொதுமக்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் இடையூறு இன்றி செல்வதற்கு ஏதுவாக இருக்கும். சிவகாசி முதல் விருதுநகர் மார்க்கம் நகர் பேருந்துகளில் சிவகாசியிலிருந்து விருதுநகர் வரும் பேருந்துகள் நந்தா ஹோட்டல், புறவழிச்சாலை, எம்ஜிஆர் சாலை, புதிய பேருந்து நிலையம், கருமாதி மடம், ஆத்துப்பாலம், டிடிகே ரோடு, மீனாம்பிகை பங்களா பழைய பேருந்து நிலையம் சென்று, மீண்டும் அதே வழியாக சிவகாசி செல்ல வேண்டும்.
மாவட்ட ஆட்சியர் தகவல்
சாத்துார் முதல் வத்திராயிருப்பு மற்றும் அருப்புக்கோட்டை முதல் வத்திராயிருப்பு மார்க்கம் செல்லும் புறநகர் பேருந்துகளில் வத்தியிராயிருப்பிலிருந்து விருதுநகர் வழியாக சாத்தூர் செல்லும் பேருந்துகள் கணபதி மில், எம்ஜிஆர் சாலை, புதிய பேருந்து நிலையம், கருமாதி மடம், ஆத்துப்பாலம், டிடிகே ரோடு வழியாக பழைய பேருந்து நிலையம் சென்று மீண்டும் அதே வழியாக திரும்ப செல்ல வேண்டும். இராஜபாளையம், சங்கரன்கோவில், தென்காசி, முதல் இராமநாதபுரம், இராமேஸ்வரம் மார்க்கம் (அழகாபுரி, சிவகாசி வழி) அருப்புக்கோட்டை பேருந்துகள் விருதுநகருக்குள் நுழையும் போது நந்தா ஹோட்டல், புறவழிச்சாலை, எம்.ஜி.ஆர் சாலை, புதிய பேருந்து நிலையம், கருமாதி மடம், அல்லம்பட்டி வழியாக அருப்புக்கோட்டை இராமநாதபுரம் செல்ல வேண்டும். இராமநாதபுரம், அருப்புக்கோட்டையிலிருந்து விருதுநகருக்குள் நுழையும் பேருந்துகள் கருமாதிமடம், புதிய பேருந்து நிலையம், எம்.ஜி.ஆர் சாலை, கணபதி மில் சந்திப்பு, புறவழிச்சாலை வழியாக இராஜபாளையம், தென்காசி மார்க்கம் செல்ல வேண்டும். இதன்படியான வழித்தட மாறுதல்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் வீ.ப. ஜெயசீலன், தெரிவித்துள்ளார்.