சென்னை பெரம்பூரில் பேராசிரியர் நூற்றாண்டு நிறைவு விழா பொது கூட்டம் நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, அமைச்சர் சேகர் பாபு, மேயர் பிரியா , கலாநிதி வீரசாமி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.


அப்போது பேசிய கனிமொழி,


இந்த மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஒருவர் சட்டமன்றத்திற்கு வந்து, தமிழ்நாட்டு தலைவர்களை, இந்த நாட்டின் அரசியல் சாசனத்தை நமக்கு தந்திருக்க கூடிய அண்ணல் அம்பேத்கரை, தந்தை பெரியாரை பேரறிஞர் அண்ணாவை பெருந்தலைவர் காமராஜரை இழிவு படுத்தி இருக்கிறார் என்றால், அது நிச்சயமாக வருத்தப்படக் கூடிய ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.


பெருமை:


ஆனால் அதையும் தாண்டி நமக்கு அதிலே ஒரு பெருமை இருக்கிறது. அது என்னவென்றால் நீ யாராக இருந்தாலும் அந்த இடத்திலேயே அதை நான் கண்டிப்பேன் என்று நம்முடைய முதலமைச்சர் காண்பித்திருக்கிறார்.


கவர்னர் பதவி தேவையில்லை, கவர்னர் பதவியை ஆளுங்கட்சி மத்தியிலே இருக்கக்கூடிய ஒன்றிய அரசாங்கத்தின் கட்சி நியமிக்க கூடிய ஒருவராக, அவர்கள் கைகளில் இருக்கக்கூடிய கருவியாக, மாநில அரசுகளை துன்புறுத்தக் கூடிய கருவியாக, ஆளுநர்களை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று 1967 ஆம் ஆண்டே நம்முடைய பேராசிரியர் பேசி இருக்கிறார்.


திராவிட மாடல்:


அம்பேத்கர் யாரு ,  பெரியார் யாரு , பேரறிஞர் அண்ணா யாரு , தலைவர் கலைஞர் யார் திராவிட இயக்கம்னா என்ன காமராஜர்னா யாரு திராவிட மாடல் ஆட்சி என்றால் என்ன அதன் சாதனைகள் என்ன  இன்னைக்கு உத்திரபிரதேசத்தில் சாலைகள் கிடையாது ,  பள்ளிக் கூடங்கள்  கிடையாது , கல்லூரிகள் கிடையாது ஆனால் தமிழ்நாடு முன்னேறிய நாடுகளில் இருக்கக்கூடிய நிலையை தாண்டிக் கொண்டிருக்கிறது அதுதான் திராவிட மாடலாச்சி என்கிற பாடத்தை முதலமைச்சர் எடுத்துக் கொண்டிருக்க முடியுமா, இதனால் ஆளுநர் நமக்கு தேவையில்லை.






பெண்களுக்கு பேருந்துகளிலே கட்டணம் கிடையாது. முன்னேறிய நாடுகள் கூட இதுவரை செய்யவில்லை. ஆனால் நாம் செய்து காட்டி இருக்கிறோம் என சென்னை பெரம்பூரில் பேராசிரியர் நூற்றாண்டு நிறைவு விழா பொது கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பேசினார்.


 


Also Read: சட்டமன்றத்தில் திமுகவின் எம்.எல்.ஏக்கள் ஆளுநரை தாக்கி பேசக்கூடாது என திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது என தகவல்


Also Read: சட்டப்பேரவையில் இருந்து எதிர்க்கட்சிகளை ஓடவிட்ட முதலமைச்சர் ஸ்டாலின், தற்போது ஆளுநரையும் ஓட விட்டிருக்கிறார் என, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.