சேலம் மாநகர் சிவதாபுரம் பகுதியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியது, "தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்று தான் கோரிக்கை வைத்து வருவதாக கூறினார். இந்தியாவின் பலமாநிலங்களில் ஜாதி வாரி கணக்கெடுப்பு எடுத்து வருகின்றனர். அங்கு அதிகாரம் இல்லாமலா? கணக்கெடுப்பு எடுத்து வருகிறார்கள். பஞ்சாயத்து தலைவருக்கு கூட கணக்கெடுப்பு நடத்துவதற்கு அதிகாரம் இருக்கிறது. அவ்வாறு இருக்கும்போது முதல்வருக்கு அதிகாரம் இருக்காதா? சமூக அநீதி என்றும் குற்றம்சாட்டினர். இதை செய்யாவிட்டால் தமிழக முதல்வருக்கு சமூக நீதிப்பேசுவதற்கான. திமுகவிற்கும் தகுதி கிடையாது. எல்லாவற்றிற்கும் மத்திய அரசு உரிமையில் எடுத்து செல்வதாக கூறும் தமிழக முதல்வர். தற்போது இவருடைய உரிமையே மத்திய அரசிற்கு தாரை வார்த்து கொடுக்கிறார். ஜாதி வாரி கணக்கெடுப்பு எடுப்பதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு என்ன பயம்? என கேள்வி எழுப்பினார். எனவே நாடு திரும்பி உடனே ஜாதி வாரி கணக்கெடுப்பு முதல்வர் எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
வன்னியர்களுக்கு 7.5 இடஒதுக்கீடு வழங்கியதை தடை செய்ததற்கு ஏழு காரணங்களை கூறி, மதுரை கிளை உயர்நீதிமன்றம் தடை செய்தது. இது தொடர்பாக மற்றொரு நீதிபதி தீர்ப்பு வழங்கியதில் தீர்ப்பின்படி, ஆறு காரணங்கள் தவறான காரணங்கள் என்றும், ஒரு காரணங்கள் மட்டுமே செல்லும் என்றும் கூறியதாக தெரிவித்தார். திமுகவிற்கும், சமூக நீதிக்கும் எந்த தொடர்பும் கிடையாது. இடஒதுக்கீடு தொடர்பாக மற்ற கட்சிகளுக்கு உணர்வு இருந்தால் திமுகவை வலியுறுத்த வேண்டும் என்றும் பேசினார்.
மேலும், உச்சநீதிமன்றத்தில் 69 சதவீதம் இடஒதுக்கீட்டிற்கு ஆபத்து வந்துவிட்டது. இந்த 69 சதவீதம் இடஒதுக்கிட்டை எதிர்த்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ளது. உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு வரும்போது 69 சதவீதத்தை ரத்து செய்துவிடுவார்கள். அவ்வாறு ரத்து செய்துவிட்டால் திமுக ஆட்சி கலைந்துவிடும். இதனால் தமிழகம் முழுவதும் கலவரம் ஏற்படும். மேலும் 50 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு போராட்டங்களில் 69 சதவீதம் இடஒதுக்கீடு கிடைத்துள்ளது. எனவே இந்த 69 சதவீத இடஒதுக்கீட்டில் தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர் என பல்வேறு சமூகத்தினர் உள்ளனர் என்பதை நிரூபித்தால் தான் 69 சதவீதம் காப்பாற்றமுடியும். இல்லாவிட்டால் ரத்து செய்துவிடுவார்கள் என்றார். 69 சதவீத இடஒதுக்கீட்டிற்கு ஆபத்து வந்துவிட்டது; தலையின் மேல் கத்தி தொங்கிக்கொண்டு உள்ளது. உடனே ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் தான் இடஒதுக்கீடை காப்பாற்ற முடியும் எனவும் கூறினார்.
மேகதாது காட்டினால் தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட வராது. ராசி மணலில் அணை கட்டுவது தொடர்பாக மத்திய அரசிடம் கோரிக்கை வைக்க உள்ளோம். விவசாயிகள் என்னை சந்தித்தபோது என் தனிப்பட்ட கருத்தாக ஒன்றை தெரிவித்தேன். கர்நாடகா மேகதாதுவில் அணை கட்டிக்கொள்ள அனுமதி அளித்து, 999 ஆண்டுகள் தமிழகத்திற்கு ஒப்பந்தம் கொடுத்தால் 20 டிஎம்சி தண்ணீர் கர்நாடகத்துக்கு கொடுத்துவிடலாம். ஆனால் ராசிமணல் அணை கட்டுப்பாடு தமிழகத்திற்கு இருக்க வேண்டும் என்றும் கூறினார். ஆனால் கர்நாடக அரசு அதற்கு ஒத்துழைப்பு வழங்காது. அவர்கள் உயர்நீதிமன்றத்தையும் மதிப்பதில்லை, நடுவன் ஆலயத்தையும் மதிப்பதில்லை" என்றும் கூறினார்.
தமிழக வெற்றிக் கழகத்திற்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு, எந்தவித பதிலும் அளிக்காமல் எழுந்து சென்றார்.