காஞ்சிபுரம் ஓரிக்கை அடுத்த உள்ள மகா பெரியவர் மணி மண்டபத்தில் ஸ்ரீ கால சாந்தி வைபவ நிகழ்ச்சி காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சாமி முன்னிலையில் நடைபெற்றது. இதில் பாஜகவை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். அந்த வகையில் சுப்பிரமணியசாமி, எச்.ராஜா மற்றும் மடாதிபதிகள் கலந்து கொண்டனர். இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சுப்பிரமணியம் சுவாமி பேசுகையில், திராவிடம் என்று கூறி வந்த கருணாநிதி அவர் பெயரிலேயே, கருணா என்ற சொல் சமஸ்கிருதத்தில் இருந்து வந்தது . அதேபோல நிதி என்று சொல்லும் சமஸ்கிருத வார்த்தை தான். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் சின்னமான உதயசூரியன் என்ற சொல்லும் சமஸ்கிருதத்தில் தான் உள்ளது. என சுப்பிரமணியன் சுவாமி ஓரிக்கை மகாபெரியவர் மணி மண்டபத்தில் பேசினார்.
பின் செய்தியாளர்களை சந்தித்த சுப்பிரமணியன் சுவாமி பேசுகையில் , சேது சமுத்திரத் திட்டத்தை யாராலும் தொட முடியாது அது முடிவுக்கு வந்துவிட்டது. ராம சேது பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து உள்ளேன்.
இங்கு உள்ள சில முட்டாள்தனமான அமைச்சர்கள் மீண்டும் சேது சமுத்திரத் திட்டத்தை ஆரம்பிப்போம் என கூறி வருகிறார்கள் யாராலும் இனி சேது சமுத்திரத் திட்டத்தை தொட முடியாது. முதல் மனுவில் சேது சமுத்திரத் திட்டத்தை தொடக் கூடாது என்பது குறித்து வழக்கு தொடர்ந்து அதில் வெற்றி பெற்றிருக்கிறேன். பாரம்பரிய சின்னமாக அறிவிக்க சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனு வருகிற 22-ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. சேது சமுத்திரத் திட்டத்தை யாராலும் தொட முடியாது, அது முடிந்துவிட்டது. ஒரே நாடு ஒரே தேர்தல் நடைபெறுமா என்று கேட்டதற்கு அவர் நடைபெற வாய்ப்பில்லை நடக்காது என்றும் தெரிவித்தார்.
முன்னதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்துவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறி வந்த நிலையில் பாரதிய ஜனதாவின் முக்கிய தலைவர்களில் ஒருவராக பார்க்கப்படும் சுப்பிரமணி சுவாமி இவ்வாறு கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருள் ஆகியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
Rahul Gandhi on Petrol Diesel Price Hike : லிட்டருக்கு ரூ.12 வரை உயரும் பெட்ரோல், டீசல் விலை?
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்