சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள ரூபாய் 5 கோடி மதிப்பிலான நிலத்தை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அபகரித்ததாக மகேஷ்குமார் என்பவர் புகார் அளித்தார். இதையடுத்து, ஜெயக்குமார் மற்றும் ஜெயக்குமார் மருமகன் மீதும் புகார் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தி.மு.க. நிர்வாகியை தாக்கிய வழக்கில் சிறையில் இருந்த நிலையிலே கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், நில அபகரிப்பு புகார் வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியுள்ளது.
Jayakumar Bail : நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஜாமீன்..!
சுகுமாறன் | 11 Mar 2022 05:58 PM (IST)
நில அபகரிப்பு வழக்கில் சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
முன்னாள்_அமைச்சர்_ஜெயக்குமார்