ஈரோடு இடைத்தேர்தல் பரப்புரையின்போது பட்டியலின சமுதாய மக்கள் பற்றி சீமான் பேசிய கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, அவருக்கு எதிராக கண்டனங்களும், ஆர்ப்பாட்டங்களும் எழுந்த நிலையில் தலித் அமைப்புகள் போராட்டம் நடத்தின. இந்த நிலையில், நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 


தேர்தல் பரப்புரையில் சீமான் சர்ச்சை பேச்சு:


கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டபோது நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பட்டியலின மக்கள் குறித்து சர்ச்சையான கருத்தை கூறியிருந்தார். விஜயநகர பேரரசு ஆட்சியில் தூய்மை பணி மேற்கொள்ள இங்கு வந்தவர்கள் தான் அருந்ததியர்கள் என பேசியிருந்தார்.  அந்த  வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.  


அருந்ததியினர் குறித்து அவதூறாக சீமான பேசியதாக எழுந்த புகாரில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வேட்பாளர் மேனகாவுக்கு தேர்தல் அலுவலர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 


நோட்டீஸ் கிடைக்கப்பெற்ற 24 மணி நேரத்தில் விளக்கமளிக்க வேண்டும் என்றும், விளக்கமளிக்கவில்லை என்றால் வேட்பாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் :


ஈரோடு கிழக்கு தொகுதியின் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா கடந்த ஜனவரி 4 ஆம் தேதி மரணமடைந்தார். இதனால் அந்த தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டு வரும் 27 ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என அரசியல் கட்சிகள் கடும் போட்டிக்கு மத்தியில் களமிறங்கி தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.77 பேர் இடைதேர்தலில் போட்டியிட இறுதி வேட்பாளர்களாக தேர்வாகியுள்ளனர். 


இது ஒரு பக்கம் இருக்க, அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்படி பழனிசாமி தென்னரசுவையும், ஓ.பன்னீர்செல்வம் செந்தில் முருகனையும் வேட்பாளராக அறிவித்தனர். இதனால் தொடர்ந்து குழப்பம் ஏற்பட்ட நிலையில், இரட்டை இலை சின்னத்தில் தென்னரசு போட்டியிடுகிறார். ஓபிஎஸ் வேட்பாளர் வாபஸ் பெற்றார்.


மேலும், அமமுக வேட்பாளராக ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மேனகா ஆகியோரை அந்தந்த கட்சிகள் அறிவித்தன. ஜனவரி 31ஆம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் பிப்ரவரி, 7 ஆம் தேதி  நிறைவடைந்த நிலையில், தங்களுக்கான சின்னத்தை ஒதுக்காததால் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று அறிவித்தார் டிடிவி தினகரன். மறுபக்கம், திமுக, அதிமுக, நாம் தமிழர், தேமுதிக வேட்பாளர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் பிப்ரவரி 24,25ஆம் ஆகிய தேதிகளில் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார்.


இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமையில் தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார் ஆகியோருடன் நடைபெற்ற  ஆலோசனை கூட்டம் நிறைவு பெற்றது. 




மேலும் வாசிக்க..


Erode East By Election: சீமான் பேச்சு.. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வேட்பாளர் மேனகாவுக்கு நோட்டீஸ்..


அருந்ததியர்கள் குறித்து அவதூறு - மதுரையில் சீமானின் உருவபொம்மை எரிப்பு


Erode Election: திருமங்கலம் ஃபார்முலாவை மிஞ்சிவிட்டது ஈரோடு ஃபார்முலா - முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்