சேலம் மாநகர் ரெட்டியூர் நரசோதிபட்டி பகுதியில் உள்ள ஸ்ரீ ராஜகணபதி கோவில் மற்றும் ஸ்ரீ கண்ணனூர் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த வெள்ளிக்கிழமை வெகு விமர்சியாக நடைபெற்றது. இந்த நிலையில் இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஸ்ரீ கண்ணனூர் மாரியம்மன் மற்றும் ராஜ கணபதி கோவிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார். பின்னர், கோவில் வந்த பக்தர்களுக்கு எடப்பாடி பழனிசாமி அன்னதானம் வழங்கினார்.



மாணவர்கள் நலனில் அக்கறை இல்லை


இதை தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியது, மாணவர்களுக்கான ஆதிதிராவிடர் நல விடுதி குறித்து நான் கூறியது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்று கூறும் அதிகாரிகள் நேரில் சேர்ந்து ஆய்வு செய்து பார்த்தார்களா என்று கேள்வி எழுப்பினார். மாணவர்கள் குற்றச்சாட்டின் அடிப்படையில் நான் பேசியதாக கூறினார். மாணவர்கள் விடுதியில் சரியான பராமரிப்பு இல்லை. தரமான உணவு இல்லை. மாணவர் கொடுக்கும் புகாரின் அடிப்படையில் தான் அறிக்கையின் வாயிலாக அறிவித்துள்ளதாக கூறினார். அரசு நேரடியாக சென்று ஆய்வு செய்து குறைபாடுகளை தீர்த்து வைக்க வேண்டும். அதுதான் நல்ல அரசின் கடமை. ஏழை குடும்பத்தில் இருந்து வந்த மாணவர்களுக்கு நல்ல வசதியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். மாணவர்களுக்கு முழுமையான அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை. மாணவர்களின் குறைபாடுகள் தான் சுட்டிக்காட்டியதாகவும் இது எதிர்க்கட்சியின் கடமை. அரசாங்கம் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்தெந்த விடுதியில் அடிப்படை வசதிகள் இல்லையோ? அதை சரிசெய்தால் சரியாக இருக்கும். அதை விட்டுவிட்டு நான் சொல்லும் கருத்திற்கு எதிர்மறை கருத்து கூறுவது எந்த விதத்தில் நியாயம் என்றும் தெரிவித்தார்.


Jayam Ravi Divorce : மனைவி ஆர்த்தியை பிரிந்தார் ஜெயம் ரவி.. ஷாக்கில் ரசிகர்கள்..


 


தவெகவில் செஞ்சி ராமச்சந்திரன்?


தமிழக வெற்றிக் கழகத்தில் செஞ்சி ராமச்சந்திரன் இணைய போவதாக தகவல் வெளியாகி உள்ளது என்ற கேள்விக்கு, அதிமுக என்பது கடல் போன்றது. செஞ்சி ராமச்சந்திரன் போன்று ஆயிரக்கணக்கானோர் பேர் அங்கம் வகிக்கின்றனர். உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதிமுக ஒரு வலிமையான இயக்கம். 30 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளது. பொன்விழா கண்ட கட்சி வேண்டுமென சிலர் திட்டமிட்டு வதந்தியை கிளப்பி வருகின்றனர்.



பரந்தூர் விமான நிலைய பணிக்கு விவசாயிகள் எதிர்ப்பு குறித்து கேள்விக்கு, தமிழக அரசு விவசாயிகளை அழைத்து முறையான பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுகாண வேண்டும் விவசாயிகளின் கோரிக்கைகள் என்னென்ன வைக்கிறார்கள் என்று ஒரு குழு அமைத்து அதற்கு தீர்வு காண வேண்டும் எனவும் கூறினார்.


அரசு மருத்துவமனையில் சுகாதார சீர்கேடு நிலவுவதாக எழும் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மருத்துவமனைகளில் சுகாதார சீர்கேடு நிலவுவதாக கூறினார். ஏற்கனவே மருத்துவமனைகளில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டுவதாகவும், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்களே தவிர எதிர்க்கட்சி சொல்லும் குற்றச்சாட்டின் அடிப்படையில் ஆய்வு செய்யவேண்டும். அதனை சரிசெய்ய வேண்டும். எதிர்க்கட்சி சொல்லும் கருத்துக்களுக்கு எல்லாம் எதிர்மறை கருத்துக்களை சொல்கிறார்கள்.தமிழக மக்களின் நிலைபாடு மற்றும் குறைபாடுகளை எடுத்துக் கூறுகிறோம். மக்கள் தன்னிடம் குறைகள் கூறுகிறார்கள். இதை வெளியே தெரிவித்தால் சரி செய்ய வேண்டும் என்று என்னிடம் கோரிக்கை வைக்கிறார்கள். அதன் அடிப்படையில் நான் வெளியிடுகிறேன் என்று கூறினார்.