Anbumani Ramadoss: முதல்வர் ஸ்டாலினுக்கும், சமூக நீதிக்கும் எந்த தொடர்பும் கிடையாது - அன்புமணி ராமதாஸ்

தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் அதிக சீட்டுகள் கேட்பார்கள் என்பதற்காக ஜாதி வாரி கணக்கெடுக்க எடுக்க மறுக்கிறார்கள்.

Continues below advertisement

சேலம் மாநகர் சிவதாபுரம் பகுதியில் வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்த சிவதாபுரம் குப்புசாமி குடும்பத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வீடு கட்டித் தரப்பட்டுள்ளது. இதனை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், சிவதாபுரம் குப்புசாமி குடும்பத்திற்கு வழங்கினார். 

Continues below advertisement

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், "35 ஆண்டுகளுக்கு முன்பாக வன்னியர் இட ஒதுக்கீட்டிற்காக சாலை மறியல் போராட்டங்கள் நடத்தப்பட்ட நிலையில் ஒரு வாரம் எந்த ஒரு வாகனமும் சொல்ல முடியாத அளவிற்கு மிகப்பெரிய அளவில் போராட்டம் நடைபெற்றது. அப்போது அந்த ஒரு நாளில் 21 சுட்டும், அடித்தும் கொல்லப்பட்டனர். அந்த ஒரு வாரத்தில் 30 பேர் உயிரிழந்தனர். சமூக நீதி எங்களுக்கு வேண்டுமென்று என்று போராட்டம் நடத்தப்பட்டது. 21 பேரை கொன்றது குறித்து எந்த ஒரு கட்சியும் கேட்கவில்லை.

பின்தங்கிய சமுதாயங்களில் நிலைகுறித்து அறியவேண்டும் என்றால் ஜாதி வாரி கணக்கெடுப்பு கட்டாயம் எடுக்க வேண்டும். ஜாதி வாரி கணக்கெடுப்பு வேண்டுமென்றால் எங்களுக்கு அதிகாரம் இல்லை என்று முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். இந்தியாவில் பஞ்சாயத்து தலைவருக்கு ஜாதி வாரி கணக்கெடுப்பு எடுப்பதற்கு அதிகாரம் உள்ளது. முதல்வர் கூறுவது எவ்வளவு பெரிய ஏமாற்று வேலை. முதல்வர் ஸ்டாலினுக்கு ஜாதி வாரி கணக்கெடுப்பு எடுப்பதற்கு பிடிக்கவில்லை‌. அரசியல் நோக்கு தான் காரணம். தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் அதிக சீட்டுகள் கேட்பார்கள் என்பதற்காக ஜாதி வாரி கணக்கெடுக்க எடுக்க மறுக்கிறார்கள். முதல்வர் ஸ்டாலினிற்கும், சமூக நீதிக்கும் எந்த தொடர்பும் கிடையாது. கருணாநிதிக்கும் சமூக நீதிக்கும் கூட தொடர்பு இருந்தது. தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை மோசமான நிலையில் உள்ளார். ஓட்டுபோட மட்டும்தான் தேவை என்பதற்காக மக்களை வைத்துள்ளனர்" என்று பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள், மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம், பாட்டாளி மக்கள் கட்சியின் உறுப்பினர்கள், வன்னியர் சங்க தலைவர்கள் உள்ளிட்டோம் உடனிருந்தனர்.

Continues below advertisement