புதுச்சேரி: எம்ஜிஆர் பிறந்தநாளையொட்டி நேற்று புதுச்சேரி வந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைவர் டிடிவி தினகரன், புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள எம்ஜிஆரின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு, பெண்களுக்கு எதிரான குற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து காட்டாட்சி நடக்கிறது. திமுக ஆட்சியை அகற்ற ஜெலலிதாவின் தொண்டர்கள் ஒரணியில் ஒன்றாக தொடர வேண்டும். திமுக குடும்பக் கட்சி என்பதே தாண்டி குடும்பம் தான் எல்லாமே அங்குள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணி வலுவாகி வருகிறது. வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சியை உறுதியாக முடிவுக்கு கொண்டு வருவோம்.

இதையும் படிங்க: SVAMITVA Scheme; சொத்த காப்பாத்த இப்படி ஒரு வழியா.? ஸ்வமித்வா சொத்து அட்டைகள் வழங்கிய மோடி

ஈரோடு இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளோம். ஏழை மக்களை காலை முதல் மாலை வரை பட்டியில் அமரவைத்தது போல் உட்கார வைத்தனர். இந்த இடைத்தேர்தல் தமிழக தலையெழுத்தை மாற்றி அமைக்க போவதில்லை. தேர்தல் ஆணையத்தால் திமுகவின் அதிகார துஷ்பிரயோகம், பண பலத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என்பதால் பாரதிய ஜனதா கட்சி உட்பட அனைத்து கூட்டணி கட்சிகளும், எதிர்க்கட்சிகளும் புறக்கணித்துள்ளன. இரட்டை இலை இருந்தும் திமுகவுக்கு மறைமுகமாக உதவி செய்யும் வகையில் தேர்தலை அதிமுக புறக்கணித்துள்ளது.

இதையும் படிங்க: மெட்ரோ ரயில் மேலூரைத் தாண்டுமா.. மதுரை மக்களின் எதிர்பார்ப்பு இது தான் !

இதனை, வரும் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி எனும் சுயநல மனிதரின் ஆட்டம் ஓய்ந்து விடும். தொண்டர்கள் விழித்து கொண்டால் அக்கட்சிக்கு பாதுகாப்பாக இருக்கும். எடப்பாடி பழனிச்சாமி கட்சித் தலைவரானதும், முதல்வரானதும் லாட்டரி சீட்டு அடித்தது போல் யோகம் தான். அவர் சிறைக்கு செல்லாமல் இருக்கவும், ஊழல் உட்பட எவ்வழக்கும் வராமல் இருக்கவும் திமுகவின் பி டீம் ஆக செயல்பட்டு வருகிறார் என டிடிவி தினகரன் கூறினார்.