Anbumani: உயிரோடு எரித்த கொடூரம்.. கொதித்து எழுந்த அன்புமணி..‌ சரமாரி கேள்வி..

Anbumani Ramadoss : "ஓரளவிற்கு தான் பொறுத்துக் கொள்ள முடியும் எங்களுடைய பொறுமைக்கும் எல்லை உண்டு, இதை முதலமைச்சர் புரிந்து கொள்ள வேண்டும்" 

Continues below advertisement

ராணிப்பேட்டை மாவட்டம் திருமால்பூர் கிராமத்தைச் சேர்ந்த 2  இளைஞர்கள் மீது 6 பேர் பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்றுள்ளனர்.‌ இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.அவர்களை பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து கேட்டறிந்தார்.

Continues below advertisement

அன்புமணி ராமதாஸ் பேட்டி:

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியை அடுத்த நெல்வாய் கிராமத்தைச் சார்ந்த பாமக இரண்டு இளைஞர்கள் கொடூரமான முறையில் பெட்ரோல் ஊற்றி கொளுத்தி இருக்கின்றார்கள். தமிழரசன் மற்றும் விஜய கணபதி என்ற இரண்டு நபர்கள் பாதிக்கபட்டிருக்கிறார்கள்.

இதை செய்தவர்கள் அருகில் உள்ள திருமால்பூர் சேர்ந்த பிரேம் உள்ளிட்ட ஆறு, ஏழு நபர்கள் இவர்கள் விசிகவை சேர்ந்தவர்களும் அனுதாபிகளும் ஆவர்  என தெரிவித்தார்.‌

இது திடீரென்று நடந்த சம்பவம் கிடையாது கடந்த காலங்களில் அந்த பகுதியில் இது போன்ற பல சம்பவங்கள் நடைபெற்றிருக்கிறது. காவல்துறை கண்டுகொள்ளாமல் விட்டதால் இந்த அளவுக்கு துணிச்சல் வந்துள்ளது. எங்கள் கட்சியை சார்ந்த இரண்டு நபர்களை பெட்ரோல் ஊற்றி திட்டமிட்டு கொளுத்திய கொடூரமான செயலை தமிழ்நாட்டில் எல்லாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

இதற்கு முக்கிய காரணம் திருமால்பூர் மட்டுமல்ல சுற்றி இருக்கக்கூடிய கிராமங்களில் அதிக அளவில் கஞ்சா விற்று கொண்டிருக்கிறார்கள் அதைப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். காவல்துறைக்கு தெரிந்து தான் செய்து கொண்டிருக்கிறார்கள் ராணிப்பேட்டை மாவட்டம் மட்டுமல்ல என தெரிவித்தார் .

தமிழ்நாடு முழுவதும் கஞ்சா மாநிலமாக மாறி இருக்கிறது

தனிப்பட்ட சம்பவம் கிடையாது என் கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களுக்கும் இது போன்ற கொலை வெறி தாக்குதல் கிண்டல் செய்வது அதிக அளவில் நடைபெற்ற படுகிறது நாங்களும் எங்கள் கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களை அமைதிப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறோம்.

கடந்த காலம் போல் இருந்தால் வேறு விதமாக கலவரம் போல் மாறும் ஆனால் எங்கள் கட்சி நிர்வாகிகள் தொண்டர்களை தொடர்ந்து தொலைபேசி மூலமாக வலியுறுத்தி சொல்லியிருக்கிறோம்‌. இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் முதலமைச்சர் பார்த்துக் கொள்ள வேண்டும் அவருக்கு கீழ் இயங்கிக் கொண்டிருக்கிற காவல்துறை மெத்தனமான போக்கை கள்ளச்சாராயம் கஞ்சா விற்பவர்களை ஆதரவு கொடுப்பது என தெரிவித்தார்.

இதையும் படிங்க: TVK Vijay: கோட்டைவிட்ட விஜய் - புலம்பும் தவெக நிர்வாகிகள் - ஈரோடு கிழக்கில் சீமான் அறுவடை பலிக்குமா?

பிரேம் என்கிற நபர் மீது ஐந்தாறு வழக்கு இருக்கிறது, கொலை வெறி தாக்குதல் உள்ளிட்ட வழக்குகள் அவன் மீது இருக்கிறது தேடப்படும் குற்றவாளி அவன் ஆனால் காவல்துறையினர் அவனை அப்படியே கண்டு கொள்ளாமல் விட்டு விட்டார்கள் அவன் பெட்ரோல் ஊற்றி கொடுத்த மனநிலைக்கு வந்தது காரணமே தமிழக அரசும் காவல்துறையும் தான்.

கூட்டணி கட்சி என்றால் என்ன வேண்டுமானாலும் செய்யலாமா ?

ஓரளவிற்கு தான் பொறுத்துக் கொள்ள முடியும்.. எங்களுடைய பொறுமைக்கும் எல்லை இருக்கிறது. முதலமைச்சர் இதில் நேரடியாக தலையிட வேண்டும். எப்பொழுதும் போல் கண்டுகொள்ளாமல் இருக்க கூடாது யார் யார் குற்றவாளி என்று கண்டறிய வேண்டும் ஆறு ஏழு நபர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் எங்கள் தொண்டர்கள் இருவரும் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

இரண்டு பேரை தான் காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள்.

உள்ளே இருப்பவர்களைப் பார்த்தால் எனக்கு பதறுகிறது மருத்துவர் என்பதால், எனக்கு தெரியும் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்கள். முதலமைச்சர் நேரடியாக தலையிட்டு குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும். இது போன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது கடலூர் கள்ளக்குறிச்சி உள்ளிட்ட இடங்களில் இது போன்ற சம்பவங்கள் நடந்திருக்கிறது. எங்களுடைய பொறுமைக்கும் எல்லை இருக்கிறது இதை முதலமைச்சர் புரிந்து கொள்ள வேண்டும்.

இதையும் படிங்க : TVK Vijay: அனுமதி கொடுத்த காவல்துறை... பரந்தூர் பறக்கும் விஜய்.. பின்னணி என்ன?

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஊரே கலவரம் ஆகி அதை வேறு விதமாக கொண்டு சென்றார்கள். அதை இன்னும் மறக்கவில்லை.தமிழரசனுடைய தந்தையும் மூன்றாண்டுகளுக்கு முன்பாக இது போன்று தாக்கப்பட்டு இருக்கிறார்கள். என்ன சட்ட ஒழுங்கு தமிழ்நாட்டில் நடக்கிறது முதலமைச்சர் எதற்கு காவல்துறை வைத்திருக்கிறார் அவரால் செயல்பட  முடியவில்லையென்றால் காவல்துறையை வேறு யாரிடமாவது கொடுத்திடலாம். 

எங்கு பார்த்தாலும் கொலை நடக்கிறது. இனியாவது தடுத்து நிறுத்துகிற சூழலை தமிழகத்தில் ஏற்படுத்த வேண்டும் மக்களுக்கு ஒரு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

Continues below advertisement