அதிமுகவில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு பல்வேறு அதிரடி திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. கடந்த 2017 ஆம் ஆண்டு ஓபிஎஸ் - இபிஎஸ் அணிகள் இணைந்த போது ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டது. இந்த நிலையில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற பொதுக்குழுவில் ஒற்றைத்தலைமை கோஷம் எழுந்தது. இதனால், மீண்டும் அதிமுகவில் ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே பிளவு ஏற்பட்டது. 




அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் 21 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்படார். அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்படுவதாகவும் தீர்மானம் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் நீதிமன்றத்தை நாடினர். பல்வேறு மேல் முறையீடுகளுக்கு பின்னர் இறுதியாக எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச் செயலாளர் பதவி பதவி வகிக்கலாம் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்ட முன்னாள் தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் நாடி. ராஜேந்திரன் என்பவர் 


KKR vs RCB IPL 2023: தொடர் வெற்றியை துரத்துமா பெங்களூரு..? கன்னி வெற்றியை பெறுமா கொல்கத்தா? ஹெட் டூ ஹெட் விவரம்..!



அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி ஆக வேண்டிய கடந்த ஒரு ஆண்டுகளாக சீர்காழியை அடுத்த  காரைமேடு ஸ்ரீ சத்குரு ராஜேந்திர சுவாமிகள் 18 சித்தர் பீடத்தில் பௌர்ணமி தோறும் மகாயாகம் செய்ததாகவும், அதன் பலனாக அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படுள்ளதாகவும், அதனை அடுத்து நேற்று பங்குனி உத்திரம் பௌர்ணமியில் மகாயாகம் செய்து எடப்பாடி பழனிசாமி தமிழக முதல்வராக வேண்டி மகாயாகம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.


Poorna: அழகிய குழந்தையும் அன்பு வாழ்த்துகளும்... ரமலான் மாதத்தில் பூர்ணா வீட்டுக்கு வந்த புதுவரவு!




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண