இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 9வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அவர்களின் சொந்த மைதானமான கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் சந்திக்கிறது. 

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான முந்தைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி DLS முறையில் தோல்வியை சந்தித்தது. மறுபுறம், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி அபார வெற்றிபெற்றது. இதன் காரணமாக, தொடர் வெற்றியை பெற பெங்களூரு அணி போராடும். அதே வேளையில், தங்களது முதல் வெற்றியை பெற கொல்கத்தா அணி தீவிரமாக களமிறங்கும். கொல்கத்தா அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் இல்லாததால், மிடில் ஆர்டரை வலுப்படுத்த வேண்டும். 

ஆர்சிபியை பொறுத்தவரை பந்துவீச்சு மற்றும் பேட்டிங் வலுவான அணியாக இருந்து வருகிறது. மும்பை அணிக்கு எதிராக கேப்டன் பாப் டு பிளெசிஸ் மற்றும் விராட் கோலியின் சிறந்த பேட்டிங், இந்த போட்டியிலும் தொடர்ந்தால் எதிரணிக்கு பெரிய அடியாக இருக்கும் . 

ஹெட் டூ ஹெட்: 

கொல்கத்தா அணி மற்றும் பெங்களூரு அணி இதுவரை 30 முறை நேருக்குநேர் மோதியுள்ளது. அதில், அதிகபட்சமாக கொல்கத்தா அணி 16 முறையும், பெங்களூரு அணி 14 முறையும் வென்றுள்ளன. 

புள்ளி விவரங்கள் கொல்கத்தா  பெங்களூர்
அதிகபட்ச ஸ்கோர்  222 213
குறைந்தபட்ச ஸ்கோர்  82 49
1st பேட்டிங் வெற்றி 7 3
2nd பேட்டிங் வெற்றி 9 11
அதிக ரன்கள்  கவுதம் கம்பீர் (530 ரன்கள்) விராட் கோலி (786 ரன்கள்)
அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் பிரெண்டன் மெக்கல்லம் (158*)  கிறிஸ் கெய்ல் (102*)
அதிக விக்கெட்கள் சுனில் நரைன் (21)  யுஸ்வேந்திர சாஹல் (19)
சிறந்த பந்துவீச்சு எல் பாலாஜி (4/18) வனிந்து ஹசரங்க (4/20)

படைக்கவிருக்கும் சாதனைகள்:

  • சுனில் நரைன் ஐபிஎல் தொடரில் இன்று தனது 150 போட்டியில் விளையாட இருக்கிறார்.
  • பெங்களூர் பந்துவீச்சாளர் ஹர்ஷல் பட்டேல் ஐபிஎல் தொடரில் 100 விக்கெட்களை எடுக்க 2 விக்கெட்கள் மட்டுமே தேவையாக உள்ளது.
  • டி 20 கிரிக்கெட்டில்  7000 ரன்களை கடக்க பெங்களூர் வீரர் தினேஷ் கார்த்திக்கு 59 ரன்கள் தேவைப்படுகிறது.
  • ஆண்ட்ரே ரஸல் ஐபிஎல் தொடரில் இன்று 100வது போட்டியில் விளையாடுகிறார். நிதிஷ் ராணா ஐபிஎல் தொடரில் 200 பவுண்டரிகள் அடிக்க 7 பவுண்டரிகள் தேவையாக இருக்கிறது.
  • கொல்கத்தா பந்துவீச்சாளர் டிம் சவுத்தி ஐபிஎல் தொடரில் 50 விக்கெர்கள் எடுக்க 3 விக்கெட்கள் தேவையாக உள்ளது.
  • கொல்கத்தா பேட்ஸ்மேன் ரஹ்மானுல்லா குர்பாஸ் டி20 கிரிக்கெட்டில் 200 சிக்ஸர்களுக்கு 2 தேவை. அதேபோல், டேவிட் வைஸ் அதே மைல்கல்லை எட்ட 3 சிக்ஸர்கள் தேவை. 

KKR முழு அணி விவரம்: 

நிதிஷ் ராணா (சி), ரஹ்மானுல்லா குர்பாஸ், வெங்கடேஷ் ஐயர், ஆண்ட்ரே ரஸ்ஸல், சுனில் நரைன், ஷர்துல் தாக்கூர், லாக்கி பெர்குசன், உமேஷ் யாதவ், டிம் சவுத்தி, ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி, அனுகுல் ராய், ரிங்கு சிங், நாராயண் ஜெகதீசன், வையப் ஷர்ரோ , டேவிட் வெய்ஸ், குல்வந்த் கெஜ்ரோலியா, மன்தீப் சிங், லிட்டன் தாஸ், ஷாகிப் அல் ஹசன்.

RCB முழு அணி விவரம்: 

விராட் கோலி, க்ளென் மேக்ஸ்வெல், முகமது சிராஜ், ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ் (கேட்ச்), ஹர்ஷல் படேல், வனிந்து ஹசரங்கா, தினேஷ் கார்த்திக், ஷாபாஸ் அகமது, ரஜத் படிதார், அனுஜ் ராவத், ஆகாஷ் தீப், ஜோஷ் ஹேசில்வுட், மஹிபால் லோம்ரோர், ஃபின் ஆலன், சுயாஷ் பிரபுட்ஸ், சுயாஷ் பிரபுட்ஸ் சர்மா, சித்தார்த் கவுல், டேவிட் வில்லி, ரீஸ் டாப்லி, ஹிமான்சு ஷர்மா, மனோஜ் பந்தகே, ராஜன் குமார், அவினாஷ் சிங், சோனு யாதவ், மைக்கேல் பிரேஸ்வெல்

KKR vs RCB-IPL 2023: கணிக்கப்பட்ட லெவன்ஸ்..

கேகேஆர்:  என் ஜெகதீசன் (விக்கெட் கீப்பர்), ரஹ்மானுல்லா குர்பாஸ், நிதிஷ் ராணா (கேப்டன்), வெங்கடேஷ் ஐயர், ரிங்கு சிங், ஆண்ட்ரே ரஸ்ஸல், ஷர்துல் தாக்கூர், சுனில் நரைன், டிம் சவுத்தி, உமேஷ் யாதவ், வருண் சக்ரவர்த்தி

ஆர்சிபி:  ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), விராட் கோலி, கிளென் மேக்ஸ்வெல், மைக்கேல் பிரேஸ்வெல், ஷாபாஸ் அகமது, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), டேவிட் வில்லி, ஹர்ஷல் படேல், ஆகாஷ் தீப், கர்ன் சர்மா, முகமது சிராஜ்