நடிகை பூர்ணாவுக்கு நேற்று ஆண் குழந்தை பிறந்த நிலையில் அவருக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


2004ஆம் ஆண்டு சினிமாவில் அறிமுகமான நடிகை பூர்ணா, மலையாளம், தமிழ், தெலுங்கு என  தென்னிந்திய மொழிகள் முழுவதும் கோலோச்சி வந்துள்ளார்.


ஷாம்னா காசிம் எனும் இயற்பெயர் கொண்ட பூர்ணா 2004ஆம் ஆண்டு ‘மஞ்சு போலோரி பெண்குட்டி’ எனும் மலையாளத் திரைப்படத்தில் அறிமுகமானார்.


தொடர்ந்து கோலிவுட்டில் ‘முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு’ திரைப்படத்தில் பரத்துக்கு ஜோடியாக அறிமுகமான பூர்ணா, சுதா கொங்கராவின் துரோகி,  கந்தகோட்டை, அர்ஜூனன் காதலி, சவரக்கத்தி, ஆடு புலி ஆட்டம் என பல படங்களில் நடித்துள்ளார்.




இறுதியாக கோலிவுட்டில் 2021ஆம் ஆண்டு ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளியான ‘தலைவி’ படத்தில் சசிகலா கதாபாத்திரத்தில் பூர்ணா நடித்திருந்தார்.


தெலுங்கு, மலையாளம் சினிமாக்களிலும் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்த பூர்ணா, சென்ற ஆண்டு துபாயைச் சேர்ந்த தொழிலதிபர் ஷானித் ஆசிஃப் அலி என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார்.


தொடர்ந்து நடன நிகழ்ச்சிகள், தன் இன்ஸ்டா பக்கம் என ஆக்டிவாக ரசிகர்களுடன் உரையாடி வந்த பூர்ணா தான் கருவுற்றிருப்பதை முன்னதாக அறிவித்து புகைப்படங்களையும் பகிர்ந்திருந்தார்.


முன்னதாக இஸ்லாமிய முறைப்படியும் , தன் சொந்த ஊரான கேரள மாநிலம், கண்ணூர் வழக்கப்படி வேட்டி கட்டியும் வளைகாப்பு நடத்தப்படும் புகைப்படங்களை பூர்ணா இணையத்தில் பகிர்ந்திருந்தார்.


இந்நிலையில் நேற்று பூர்ணாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்தத் தகவலை பூர்ணா தன் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்தும் தனக்கு பிரசவம் நிகழ்ந்த மருத்துவமனைக்கு நன்றி தெரிவித்தும் பூர்ணா பதிவிட்டுள்ளார்.


மேலும் தன் கணவர் மற்றும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தையும் பூர்ணா தன் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். புனித ரமலான் மாதத்தில் பூர்ணாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ள நிலையில், அவருக்கு சமூக வலைதளங்களில் ரசிகர்களும் திரைத்துறையினரும் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.




முன்னதாக நானி - கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான தசரா படத்தில் பூர்ணா நடித்திருந்த நிலையில், இந்தப் படத்தின் பாடல்களுக்கு கர்ப்ப காலத்தில் நடனமாடி வீடியோக்களைப் பகிர்ந்திருந்தார். தசரா குழுவினரை வாழ்த்தியும், ரமலான் வாழ்த்து தெரிவித்தும் பூர்ணா பகிர்ந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: Watch Video: “உங்களை பார்க்கணும்ன்னு தோணுச்சு.. அதான் வந்தேன்”.. விஜய் சேதுபதியை சந்தித்த குழந்தை..வைரலாகும் வீடியோ..!


Salman Khan: ஃபோனில் உங்கள் குழந்தை இதை பார்ப்பதை விரும்புகிறீர்களா...? ஓடிடி தளங்களில் மேலோங்கும் ஆபாசம்.. சல்மான் கான் காட்டம்!