வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. -பாஜக கூட்டணி அமைக்கும் என்றும், தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தவர்கள் ஓட போகிறார்கள் என்றும் அ.தி.மு.க. எம்.பி. சி.வி.சண்முகம் பேசினார். இந்த நிலையில், தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி அமையும் என சி.வி.சண்முகம் விரக்தியில் பேசுவதாக அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.


அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்:


என்எல்சி நிறுவனத்திற்ககு வீடு மற்றும் நிலம் வழங்கி மக்களுக்கு உரிய இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும், நிரந்திர வேலை வழங்க கோரியும், நெய்வேலி சுரங்கம் 2 முன்பு என்எல்சி நிறுவனத்தை கண்டித்தும், மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும், தமிழக அரசு கண்டித்தும் அ.தி.மு.க.வினர் ஆர்பபாட்டத்தில் ஈடுப்பட்டனர். சொத்து வரி உயர்வு, பால்வரி உயர்வு, என விலைவாசி உயர்வை கண்டித்தும்  அ.தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுது.


கடலூர் அதிமுக மேற்கு மாவட்டம் சார்பில் மாவட்ட செயலாளரும் புவனகரி சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழிதேவன் தலைமையில் -அதிமுக எம்.பி. சி.வி.சண்முகம் முன்னிலையில் இந்த ஆர்பபாட்டம் நடைபெற்றது.


சி.வி.சண்முகம் கருத்து:


அப்போது பேசிய சிவி சண்முகம், மத்திய பா.ஜ.க. அரசு சொல்லுகின்ற பணிகளை எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் தி.மு.க. செய்து வருகிறது. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. -பாஜக கூட்டணி அமைக்கும் என்றும், தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தவர்கள் ஓட போகிறார்கள் என்றும் முன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகம் பேசினார்.






மனோ தங்கராஜ் கருத்து:


அதற்கு பதிலளித்துள்ள அமைச்சர் மனோ தங்கராஜ், தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி அமையும் என சி.வி.சண்முகம் விரக்தியில் பேசுவதாக மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். மேலும், தலைமையும் கொள்கையும் இல்லாமல் அதிமுக தடுமாறி வருவதால், அ.தி.மு.க.வினர் விரக்தியில் உள்ளனர் என தி.மு.க. அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.


Also Read: உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தாம்பரம் அருகே கபடி போட்டி நடத்துவதில் எம்.எல்.ஏ, அமைச்சர் ஆதரவாளர்கள் இடையே கோஷ்டி மோததால் விளையாட்டு திடலில் பரபரப்பு ஏற்பட்டது


Also Read: திராவிடமாடல் ஆட்சி என்பது மோடி அரசாங்கம் உட்பட ஒத்துக்கொள்கிற ஆட்சியாக நடக்கிறது-ராஜ கண்ணப்பன்