திராவிட முன்னேற்றக் கழகத்தை பொருத்தவரை தவிர்க்க முடியாத தலைவராக உதயநிதி ஸ்டாலின் இருந்து வருகிறார். திமுகவின் தலைவராக இருக்கும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, அடுத்தபடியாக உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு இளைஞரணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை அந்த கட்சியினர் மற்றும் இளைஞர் அணி சேர்ந்த நிர்வாகிகள் செயல்படுத்தி வருகின்றனர். 



இந்நிலையில் ,சென்னை தாம்பரம் அடுத்த  டிடிகே நகரில் உள்ள விளையாட்டு திடலில் உதயநிதி ஸடாலின் பிறந்தநாளை முன்னிட்டு , அமைச்சர் தா. மோ அன்பரசன் ஆதரவாளரான பெருங்களத்தூர்  தெற்கு பகுதி அவைத்தலைவர் ஆதிமாறன் தலைமையில் இன்று காலை  மணி முதல்  கபடி போட்டி நடைபெறவிருந்தது.  இந்த  நிலையில் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினராக உள்ள எஸ்.ஆர் ராஜா ஆதரவாளரான பெருங்களத்தூர் மண்டல தலைவர் காமராஜ் மற்றும் வார்டு கவுன்சிலர், வட்ட செயலாளர் யாரிடமும்  அழைப்பு விடுக்காமல் , கபடி போட்டி நடத்த கூடாது என்று 100க்கும் மேற்பட்டோர் காலை  சம்பவ இடத்திற்கு கூடினர்.



 

பின்பு கபடிக்கு போட்டிக்காக அமைக்கப்பட்டிருந்த இடத்தில் இருக்கையில் கொண்டு வந்து அமர்ந்து கபடி போட்டி தொடங்கி வைப்பதற்காக வந்த மேயர் வந்தகுமாரி, துணை மேயர் காமராஜ் ஆகியோரை எதிர் தரப்பினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து இரு தரப்பினரிடம் சமாதானம் செய்ய முயற்சி செய்தும், மணி கணக்கில் இரு தரப்பினரும் தொடர்ந்து வாக்குவாதத்திலும் சலசலப்பில் ஈடுபட்டு வந்தனர்.



தகவல் அறிந்து வந்த உதவி ஆணையர் சீனிவாசன் இருதரப்பினருக்கும் இடையே பேச்சு வார்த்தை நடத்தி வரும் நிலையில் மோதல் ஏற்படாமல் தடுக்க 100க்கும் மேற்பட்ட போலீசார்  இதனால் விளையாட்டு திடலில்.பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதனால் காலை கபடி போட்டிற்க்காக வந்த வீரர்கள் 5 மணி நேரத்திற்கு மேல் காத்து கிடந்தனர்.



 

தொடர்ந்து வீரர்கள் காத்துக் இருந்ததால் இந்த விளையாட்டுப் போட்டியை எப்படியாவது நடத்த வேண்டும் என்ற எண்ணி, இது குறித்த தகவல் கட்சி மேல்மட்டத்திற்கு தகவலை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கட்சியின் முக்கிய நிர்வாகிகள், சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் பேசி உடனடியாக போட்டி நடைபெற வேண்டும் எனவும் யாரும் எந்தவித பிரச்சினையிலும் ஈடுபடக்கூடாது எனவும், அறிவுறுத்தலை தொடர்ந்து இரு தரப்பினரும் சமாதானம் ஆகினர். உதயநிதி ஸ்டாலின் தற்போது தான் அமைச்சராகி உள்ள நிலையில் அவர் பெயரில் நடத்தப்பட்ட போட்டியில் , உட்கட்சி காரணமாக இரு தரப்பினர் மோதி கொண்ட சம்பவம், கட்சித் தொண்டர்களிடையே சிறிய சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.