பெரும் ஆளுமைகளின் தேர்தல் தொடர்பான அரிய தகவல்களை பவர் பக்கங்கள் என்ற தலைப்பில் தொடராக ஏபிபி நாடு தளத்தில் வெளிட்டு வருகிறோம்.  9வது தொடராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி குறித்து காண்போம். 


1952 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் நாள் சென்னையில் பிறந்தார்.  அவரது தந்தை சர்வேஸ்வர சோமயாஜுலா யெச்சூரி, தாயார் கல்பாக்கம் யெச்சூரி ஆவர். 12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்தலில், அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றார். பொருளாதார பிரிவில் முதுகலை பட்டம் முடித்துவிட்டு, டெல்லி ஜெ.என்.யூ கல்லூரியில் பொருளாதாரம் பிரிவில் டாக்டர் பட்டம் படிக்க சேர்ந்தார். ஆனால், அவசர நிலை பிரகடனத்தால் கைது செய்யப்பட்டதால் படிப்பை கைவிட்டார். ஜெ.என்.யூ கல்லூரியில் படிக்கும் போது மாணவர் அமைப்பின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.




Power Pages- 2: முதல் சட்டத்துறை அமைச்சர்தான்: ஆனாலும் பால் வியாபாரியிடம் தோற்ற அம்பேத்கர்: நடந்தது என்ன?


அரசியல் வாழ்க்கை:


1974 ஆம் ஆண்டு இந்திய மாணவர் சங்கத்தின்( SFI ) உறுப்பினராக சேர்ந்தார்.  


1975 ஆம் ஆண்டு முதல் 1977 ஆண்டு வரை தேசிய அவசர நிலை பிரகடனத்தை இந்திரா காந்தி அமல்படுத்தினார்.  அப்பொழுது சீதாராம் யெச்சூரி கைது செய்யப்பட்டார்.


1975 ஆம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக சேர்ந்தார். 1978 ஆம் ஆண்டு இந்திய மாணவர் சங்கத்தின்( SFI ) இணை செயலாளராகவும் பொறுப்பேற்றார்.


1984 ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சியின் சென்ட்ரல் கமிட்டியில் சேர்ந்தார்.


1992 ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைகள் உருவாக்கும் குழுவான பொலிட்பியூரோவில் சேர்க்கப்பட்டார்.


2005 ஆம் ஆண்டு மேற்கு வங்காள மாநிலத்தில் இருந்து நாடாளுமன்றத்திற்கு மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.


2011 ஆம் ஆண்டு மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.


2015 ஆம் ஆண்டு விசாகப்பட்டினத்தில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டத்தில், ஐந்தாவது பொதுச் செயலாளராக யெச்சூரி தேர்ந்தெடுக்கப்பட்டார்.


2018 ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் நடைபெற்ற 22வது கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் பொதுச் செயலாளராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  


Also Read: Power Pages 7: வரி கட்ட முடியாத நிலை! தோற்கடித்த தி.மு.க.வினரே வருந்தியது – காமராஜரின் அரசியல் களம்


பிடல் காஸ்ட்ரோ- யெச்சூரி சந்திப்பு :


பிடல் காஸ்ட்ரோவை சந்தித்தது குறித்து பேசிய யெச்சூரி, “ அவர் என்னிடம் இந்தியாவில் எவ்வளவு இரும்பு  உற்பத்தி செய்யப்படுகிறது, நிலக்கரி மற்றும் தானிய உற்பத்தி குறித்து கேட்டார்” என நினைவு கூர்ந்தார்.


பாஜக 2016 ஆம் ஆண்டில் பணமதிப்பிழக்கம் குறித்து நாடாளுமன்றத்தில் கடும் விமர்சனம் செய்தார். குளத்தில் உள்ள முதலையை அழிப்பதாக குளத்தில் உள்ள நீரை அகற்றுகிறார்கள். முதலை நிலத்திலும் வாழும் என்பதை உணராமல் இருக்கிறார்கள், இதனால் பாதிக்கப்படுவது சிறிய மீன்கள் போன்ற சாதாரண மக்கள் என கடுமையாக எதிர்த்தார்.


ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு, சீதாராம் யெச்சூரிக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அழைப்பை மறுத்து விட்டார். இதுகுறித்து பேசிய அவர், மத நிகழ்ச்சி அரசு நிகழ்ச்சியாக மாற்றப்படுகிறது. இந்திய ஜனநாயக அரசு மதம் சார்ந்ததாக இருக்க கூடாது. அரசியல் நோக்கங்களுக்காக மக்களின் மத உணர்வுகளை தவறதுலாகப் பயன்படுத்துவதாக நாங்கள் உணர்கிறோம் என தெரிவித்தார்.


கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதிக்கமாக இருந்த கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள், கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆட்சி பொறுப்பிலிருந்து விலகிச் சென்று விட்டன. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில், அதை மீட்டு எடுக்கும் மிகப் பெரிய சவாலாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியின் முன் உள்ளது. 


இந்தியா கூட்டணியில் இருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, வரும் நாடாளுமன்ற தேர்தலில் தன் பலத்தை எப்படி பிரதிபலிக்க போகிறது, வரும் காலங்களில் எப்படி கட்சியை வலுப்படுத்த போகிறது என்பதை வரும் காலமே பதில் சொல்லும்.


Power Pages-1: இந்தி எதிர்ப்பு முதல் இறுதிபயணம் வரை! தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தை உடைத்த அண்ணா!