அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அளித்த புகாரில் சசிகலா உள்ளிட்ட 500 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


முன்னாள் அதிமுக அமைச்சர் சிவி.சண்முகம் சில நாட்களுக்கு முன்பு திண்டிவனம், ரோஷனை காவல் நிலையத்தில் புகார் செய்திருந்தார். அந்தப்புகாரில், சசிகலாவின் தூண்டுதலின் பேரில் சிலர் தொலைபேசி வாயிலாக தனக்கு கொலை மிரட்டல் விடுத்து வருவதாக கூறி இருந்தார். அதன் அடிப்படையில்  விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ரோசனை காவல்நிலையத்தில் சசிகலா மற்றும் அடையாளம் தெரியாத 500 பேர் மீது வழக்கப் பதிவு செய்தனர். கொலை மிரட்டல், தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட (501(1),507 r/w,109 IPC and 67 IT Act) உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


‛நோ நோ நோ...’ ஸ்ட்ரிக்ட் காட்டிய அதிமுக! திமுகவில் இணைந்த மாஜிக்கள்! நெருக்கடியில் சசிகலா!


மே 29-ஆம் தேதி சசிகலா பேசிய ஆடியோ இணையத்தில் வைரலானது. தொண்டரிடம் நலம் விசாரிப்பு என அன்றோடு கடந்துபோகுமா என்றால் ஆடியோ என்பதை பெரும் திட்டத்துடன் கையில் எடுத்திருந்தார் சசிகலா. இதுவரையில் 50க்கும் மேற்பட்ட ஆடியோவை கடந்து போயுள்ளார் சசிகலா. இந்த ஆடியோ ஆயுதம் வெறுமனே போனை டயல் செய்து போன்பேசும் சாதாரண விவகாரம் அல்ல. ஒரு டிஜிட்டல் வார் ரூமே சசிகலாவுக்கு வேலை செய்கிறது என்பதே சமீபத்தில் வெளியான தகவல். 




ஆடியோ, லெட்டர் என சின்ன ஆயுதத்தை கையில் எடுத்துள்ள சசிகலா பெரிய திட்டத்துடனே பயணிப்பதாக சொல்கிறது அமமுக பட்சி. நிகழ்கால அரசியலை தெரிந்துகொள்ளவும், அதிமுகவின் நகர்வுகளை புரிந்துகொள்ளவும் யூடியூப் சேனல்கள் சிலவற்றை ஃபாலோ செய்கிறாராம் சசிகலா. அதுபோல  தமிழகத்தின் பல்வேறு இடங்களிடம் இருந்து அதிமுக, அமுமுக பல தொண்டர்களின் கடிதமும், கூரியரும்  ஒருநாளைக்கு 50-க்கு குறையாமல் சசிகலாவை தேடி தினம் தினம் வருகிறதாம். அதுபோக 70 முதல் 80 போன்கால்களால் அதிர்கிறதாம் சசிகலா வீடு. இதெல்லாம் போக, தினமும் 25 முதல் 30 தொண்டர்களிடம் தொலைபேசி மூலம் சசிகலா பேசுகிறார்.


தூத்துக்குடி : குடைச்சலை கொடுக்கும் தென்மாவட்ட அதிமுக : சசிகலா ஆதரவாளர்கள் நிறைவேற்றிய தீர்மானம் !


இது குறித்து கசிந்த தகவலை டைம்ஸ் ஆஃப் இந்தியா, தினமும் காலை 6.30 மணி முதல் தொண்டர்களின் போன் கால் வரத்தொடங்கும். அது காலை 10 மணி வரை தொடரும்.  பின்னர் காலை உணவுக்கு பிறகு சசிகலா தனது ஓய்வு நேரத்தை கூறுவாராம். அதன் பின்னரே தொண்டர்களுக்கு தொலைபேசி அழைப்பு செல்கிறது. அதற்கு முன்னதாகவே எந்த தொண்டரிடம் பேசப்போகிறோம், கட்சிக்கும் அவருக்குமான தொடர்பு போன்ற தகவல்கள் திரட்டப்பட்டு ரெடியாக இருக்கும். இப்படி சரியான திட்டமிடலுடன் சசிகலா காய்நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது.