மயிலாடுதுறையில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் நடைபெற உள்ள ஒன்பது மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலில் தேர்தல் பணி குறித்து அக்கட்சியின் மயிலாடுதுறை மாவட்ட தலைவர் வெங்கடேசன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்திற்கு, சிறப்பு அழைப்பாளராக பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச்செயலாளர் தங்க.வரதராஜன் கலந்து கொண்டார்.




அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசியவர், தமிழ்நாடு முழுவதும் மாவட்ட சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ள தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை வரும் 14- ஆம் தேதி மயிலாடுதுறை வருகிறார். இந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தை இஸ்லாமியர்களுக்கு எந்தவித பாதிப்பும் கிடையாது என பல முறை கூறிவிட்டோம் இதனால் இங்குள்ள இஸ்லாமியர்களுக்கு பாதிப்படை மாட்டார்கள் என்று திமுகவிற்கு நன்கு தெரிந்தும், இஸ்லாமியர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவும், வாக்கு வங்கி அரசியலுக்காக சட்டப்பேரவையில் திமுக குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் கொண்டுவந்துள்ளது.  




மேலும் சட்டசபையில் ஈழத்தமிழர்களை கொச்சைப்படுத்தும் விதமாக தமிழ்நாடு முதல்வர் இலங்கை தமிழர் அகதிகளையும் ஊடுருவல் காரர்களையும் ஒப்பிட்டு பேசியுள்ளார்.  விவசாயிகளுக்கு லாபம் ஏற்படுத்தும் நோக்கில் சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரைப்படியே மத்திய அரசு புதிய வேளாண் சட்டங்களை கொண்டுவந்தது. ஆனால் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து தமிழக அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி இருப்பது இடைத்தரகர்களுக்கு ஆதரவாக திமுக இருக்கிறது என்பதற்கு உதாரணமாக அமைந்துள்ளது.




Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X


தனது பணியை திமுகவினருக்கு வழங்கியதால் குத்தாலம் பேரூராட்சியில் வேலை செய்த பெண் தற்கொலை


 


இந்து வழிபாட்டு முறைகளுக்கு திமுக எதிராக இருக்கிறது என்பதற்கு விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு தடை விதித்திருப்பதே உதாரணம். தமிழகத்தில் டாஸ்மாக், பேருந்துகள், பள்ளி, கல்லூரிகள் செயல்படும் நிலையில், கொரோனாவை காரணம் காட்டி விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை தடைசெய்வது கண்டனத்திற்கு உரியது என்றும்,  இந்திய அரசின் பயனற்ற சொத்துக்களை மத்திய அரசு வருவாய் ஈட்டும் வகையில் தனியாரிடம் 3 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடுகிறது. தனியார் மயமாவதால் வேலைவாய்ப்பு அதிகரிக்குமே தவிர வேறு எந்தவித பாதிப்பும் ஏற்படாது எனவும், இது காங்கிரஸ் காலத்தில் வகுக்கப்பட்ட திட்டம், காங்கிரஸ், திமுக பொய்ப்பிரச்சாரத்தை நாட்டு மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றார்.


பொறையாத்தான் கடைமடை கதவணை பழுது - விளைநிலங்களில் உட்புகுந்த கடல்நீர்