மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில்  பொறையாத்தான் கடைமடை வாய்க்கால் அமைந்துள்ளது. இந்த வாய்க்கால் மூலம், பொறையார் முதல் தரங்கம்பாடி வரையிலான விளைநிலங்கள் பாசன வசதி பெறுவதோடு குடியிருப்புகளின் பிரதான நீர் ஆதாரமாகவும் இருந்து வருகிறது. பொறையாத்தான் வாய்காலில் நல்ல நீரை சேமிக்கவும், மழைக்காலத்தில் உபரி நீர் வெளியேறவும் கடல்நீர் உட்புகுவதை தடுக்கவும் தரங்கம்பாடி அருகே பொறையாத்தான் கடைமடை பகுதியில் கதவணை அமைந்துள்ளது.




இந்த கதவணை கடந்த சில ஆண்டுகளாக போதிய பராமரிப்பு இல்லாமல் சிதிலமடைந்து கடல் நீர் உட்புக தொடங்கியது. தற்போது தரங்கம்பாடியில் இருந்து பொறையாறு வரை இரண்டு கிலோ மீட்டர் வரை கடல் நீர் உட்புகுந்து விளைநிலங்கள் மற்றும் நிலத்தடி நீர் முற்றிலும் பாதிக்கபட்டுள்ளது. எனவே மழைக்காலம் தொடங்கும் முன்பாக பொறையாத்தான் கதவணையை சீரமைக்க அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.




மயிலாடுதுறையில் மாற்றுத்திறனாளியிடம் 2000 லஞ்சம்’- மனிதாபிமானமற்ற தனி வட்டாட்சியர் கைது


மயிலாடுதுறை மாவட்டத்தில் முக்கிய தொழிலாக விவசாயம் விளங்கி வருகிறது. இந்நிலையில் போதிய மழையின்மை, சரியான நேரத்தில் மேட்டூர் அணை திறக்கப்படாத காரணம், அப்படி உரிய நேரத்தில் மேட்டூர் அணை திறக்கப்பட்டாலும், வாய்க்கால்கள் சரியான முறையில் தூர்வாராமலும், காவிரி கடைமடை என்பதாலும் இப்பகுதி விவசாயிகளுக்கு விவசாயம் என்பது கடும் சிரமத்திற்கு ஒன்றாகவே உள்ளது.




இருந்தும் காலம் காலமாக விவசாய தொழிலை மட்டுமே நம்பி உள்ள இப்பகுதி விவசாயிகள் நிலத்தடி நீரை வைத்து விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதுவும் கடந்த சில ஆண்டுகளாக நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் இன்றி தவித்து வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் மட்டும், சுமார் ஒன்றரை லட்சம் ஏக்கர் நெல் சாகுபடி செய்யப்படுகிறது.


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X



அவ்வாறு நிலத்தடி நீரை வைத்து விவசாயத்தில் ஈடுபட்டு பயிர்களை காப்பாற்றி வரும் விவசாயிகளுக்கு சம்பா சாகுபடி அறுவடை காலம் மார்கழி, மற்றும் தை மாதம் என்பதால் அந்த மாதங்களில் ஏற்படும் புயல், கனமழை உள்ளிட்டவற்றில் சிக்கி கடும் பாடுபட்டு பயிர் செய்த பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கி வீணாகும் தொடர்கதையாக இருந்து வருகிறது. இந்த நிலையில் இது போன்ற கதவணைகள் சரி செய்யலாம் கடல்நீர் உட்புகுந்து விளைநிலங்களை பாழ்படுத்துவதாக இப்பகுதி விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.


பாழ்பட்டு கிடக்கும் மீன் சேமிப்பு குளிர்பதன கிடங்கு! - சீர் செய்து தர கோரிக்கை