"ஓபிஎஸ் புலியாக மாற வேண்டும். எடப்பாடி பழனிசாமி பதவி ஆசை பணத்தாசை பிடித்தவர். சசிகலாவின் காலில் ஊர்ந்து சென்று விழுந்து முதல்வர் பதவியை பெற்று அவருக்கு துரோகம் செய்தவர்" என்று ஓபிஎஸ் ஆதரவாளர் சையதுகான் காட்டமாக பேசியுள்ளார்.
அதிமுகவின் உட்கட்சி பிரச்சனை உச்ச கட்டத்தை எட்டியுள்ள நிலையில் தற்போது ஓ பன்னீர் செல்வதற்கு ஆதரவாக நீதிமன்ற தீர்ப்பு தற்போது வெளியான நிலையில், தீர்ப்பு குறித்து பேசிய ஓபிஎஸ், அதிமுகவினர் இனிமேல் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றும் கசப்பு உணர்வுகளை மறந்து கட்சியின் நலனுக்காக ஒன்றிணைய வேண்டுமென கூறிய நிலையில், இதற்கு பதில் அளித்து பேசிய எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஓபிஎஸ் குறித்து பல்வேறு விமர்சனங்களை முன் வைத்தனர்.
இந்த நிலையில் ஓபிஎஸ் சொந்த மாவட்டமான தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள பன்னை வீட்டில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக்கு பின்னர் ஓபிஎஸ்-ன் பண்ணை வீட்டில் செய்தியாளர்களை சந்தித்த தேனி மாவட்ட அதிமுக செயலாளர் சையதுகான் கூறுகையில், ஓபிஎஸ் புலியாக மாற வேண்டும், எடப்பாடி பழனிச்சாமி பதவி ஆசை பணத்தாசை பிடித்தவர். சசிகலாவின் காலில் ஊர்ந்து சென்று விழுந்து முதல்வர் பதவியை பெற்று அவருக்கு துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிச்சாமி. செங்கோட்டையன் தான் முதன் முதலில் சசிகலாவினால் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். அதனை செங்கோட்டையன் ஏற்காததினால் எடப்பாடி முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.
TN Rain: புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்... வெளுக்கப்போகும் கனமழை.. வானிலை மையத்தின் எச்சரிக்கை!
கட்சியில் இணைந்துபணியாற்ற நாங்கள் ரெடி. ஓ.பன்னீர்செல்வத்தை பசுத்தோல் போற்றிய புலி எனக் கூறிய ராஜன் செல்லப்பா பல கட்சி மாறியவர் கட்சிக்கு துரோகம் செய்தவர். ஓபிஎஸ் இனிமேல் புலியாக மாற வேண்டும் எனக் கூறினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்