நாம் தமிழர் கட்சியினர் ஆளும் திமுக அரசை மிக கடுமையாக விமர்சித்து வருகின்றனர். திமுகவினர் என்னை பாஜகவின் பி டீம், சங்கி என விமர்சிக்கின்றனர். யாருடா சங்கி? என பேசியபடியே பொதுக்கூட்ட மேடையிலேயே காலணியை கழற்றிக் காண்பித்தார் நாம் தமிழர் கட்சியினரின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். இது தமிழகம் முழுவதும் திமுகவினரை கடுமையாக கொந்தளிக்க வைத்தது. இது தொடர்பாக விளக்கம் அளித்திருந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திமுக என்னுடைய இயக்கம். திமுகவின் மூத்த தலைவர்கள் பலரும் எனக்கும் நெருக்கம். திமுக அரசு நன்றாக செயல்பட வேண்டும் என்கிற ஆதங்கத்தில்தான் நான் பேசுகிறேன் என்றார். ஆனாலும் திமுகவினரின் ஆதங்கமும் கொந்தளிப்பும் குறையவில்லை.



இந்த நிலையில் தருமபுரி மாவட்டம் மொராப்பூர் பேருந்து நிலையத்தில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 தமிழர்கள், நீண்டகால சிறைவாசம் அனுபவிக்கும் இஸ்லாமியர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. இதில் நாம் தமிழர் கட்சியின் மாநில பேச்சாளர் ஹிம்லர் பங்கேற்றார். முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து ஹிம்லர் விமர்சித்து கொண்டிருந்த போது திமுகவினர் மேடையேறி அவரது பேச்சை நிறுத்தினர். இதனால் மேடையின் ஓரமாக சென்று ஹிம்லர் அமைதியாக நின்று கொண்டிருந்தார். மொரப்பூர் திமுகவினரின் இந்த நடவடிக்கையை சமூக வலைதளங்களில் அக்கட்சியினர் பாராட்டி வருகின்றனர். இன்னொரு பக்கம், இந்த ஊரில் பொதுக்கூட்டம் போடுகிறோம்.. மொரப்பூர் மாதிரி இங்க வந்து முறைச்சு பாருங்க.. என்று நாம் தமிழர் கட்சியினர் சவால் விடுத்து கொண்டிருக்கின்றனர்.






விவாத களமாக இருந்த சமூக வலைதளம் யுத்த பூமி போல இருதரப்பால் உருமாறிக் கொண்டிருக்கிறது. இந்த பஞ்சாயத்தில்தான் ஹிம்லர் என்ற பெயர் குறித்த சுவாரசியமான விவாதமும் நடந்து வருகிறது. அப்போது திமுகவினர் கூட்டம் நடந்த மேடையில் ஏறி அவதூறாக பேசியதாக கூறி சண்டையிட்டுள்ளனர். அப்போது மேடையில் இருந்த ஹிம்லர் ஒரு பேட்டியில் அது குறித்து பதில் கூறியிருக்கிறார். ஏன் உங்களை அடுத்தவரை நீங்கள் திருப்பி அடிக்கவில்லை என்று கேட்ட கேள்விக்கு, "என்னை அடித்தவர்கள் என் தாத்தா வயதில் இருந்தார்கள், என் தாத்தாவை எப்படி நான் அடிக்க முடியும். தாத்தா வயதில் இருக்கும் ஒரு வயதானவரை அடிக்கும் அளவிற்கு மன நோயாளி அல்ல, அவர்கள் வேண்டுமானால் பேரன் வயது உள்ள என்னை அடிக்கும் அளவிற்கு நிதானம் இழந்திருக்கலாம், நாங்கள் அப்படி இல்லை" என்று கூறியுள்ளார். அதனை அடுத்து சமூக வலைதளங்களில் நாம் தமிழர் கட்சியினர் #தாத்தா_காலத்து_திமுக என்ற ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.