தூத்துக்குடியின் என்.ஜி.ஓ. காலனியைச் சேர்ந்தவர் சுந்தர்கணேஷ். அவருக்கு வயது 29. இவர் ஷிப்பிங் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது நிறுவனம் சென்னையிலும், தூத்துக்குடியிலும் இயங்கி வருகிறது. தூத்துக்குடியில் தற்போதுள்ள சுந்தர் கணேஷ் தனது காரை எப்போதும் வீட்டின் முன்பு நிறுத்துவதை வழக்கமாக வைத்திருந்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த 19-ந் தேதி அதிகாலை வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த காரை காணவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த சுந்தர்கணேஷ் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விசாரணையில் சுந்தர்கணேஷின் கார் திருடப்பட்ட அதே தினத்தில் சென்னையில் உள்ள அவரது நண்பரின் காரும் திருடப்பட்டுள்ளது.
சி.சி.டி.வி. காட்சிகள் உள்ளிட்ட முக்கிய ஆதாரங்கள் மூலம் தீவிர விசாரணையில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது, தூத்துக்குடி மற்றும் சென்னையில் திருடப்பட்ட சுந்தர்கணேஷ் மற்றும் அவரது நண்பரின் கார் சென்னையை அடுத்த பல்லாவரத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் படிக்க : உலகமே அழிந்தாலும்... அப்பவும் ஆர்டர் பண்ணுவோம்...’ நாடி நரம்பெல்லாம் ஊறிய பிரியாணி வெறி; ஸ்விகி தரும் டேட்டா!
இந்த இரு கார்களையும் சென்னை, சைதாப்பேட்டையைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரிகளான ஹனிபா, (38 வயது) அசோக்நகரைச் சேர்ந்த விக்னேஷ் (35 வயது) ஆகியோர் திருடியதையும் போலீசார் கண்டுபிடித்தனர். உடனடியாக, திருடப்பட்ட கார்களை மீட்டதுடன் அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையில், குறுக்கு வழியில் பணம் சம்பாதிப்பதற்காக ஆசைப்பட்டு திருட்டு வழியில் ஈடுபட்டதாக இருவரும் போலீசாரிடம் வாக்குமூலத்தின்போது கூறினர்.
மேலும், விசாரணையில் இவர்கள் இருவரும் கார்களை திருடுவதற்கு நூதன முறையை கையாண்டதும் தெரியவந்துள்ளது. சென்னையில் உள்ள சுந்தரகணேஷின் நண்பரது காரிலும், சுந்தரகணேஷ் சென்னை வந்திருந்தபோது அவரது காரிலும் செல்போன்களை பொருத்தி அதில் உள்ள ஜி.பி.எஸ். கருவி மூலமாக காரை கண்காணித்து தூத்துக்குடி வரை பின்தொடர்ந்து வந்து காரை திருடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபகாலமாக ஜி.பி.எஸ். உள்ளிட்ட அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பல்வேறு குற்றச்சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதைத்தடுப்பதற்காக சைபர் கிரைம் போலீசார் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : Low Attendence : ஆர்.எஸ்.பாரதி-அன்புமணி இடையே கடும் போட்டி; முந்தினார் அதிமுக எம்பி... ராஜ்யசபாவில் ‛கட்’ அடித்த லிஸ்ட்!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்