மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் 10 வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
அரவிந்த் கெஜ்ரிவால்:
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியதாவது, இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால், நிறைவேற்றப்படும் 10 உத்தரவாதங்களை அறிவிக்கிறேன். எனது கைது காரணமாக தாமதமாக தெரிவிக்கிறேன். இந்த உத்தரவாதங்களைப் பற்றி மற்ற இந்திய கூட்டணி கட்சிகளுடன் விவாதிக்கவில்லை, ஆனால் யாரும் எதிர்க்க மாட்டார்கள் என நம்புகிறேன். மேலும் , இந்த வாக்குறுதிகள் நிச்சயமாக நிறைவேற்றப்படும் என உறுதியளிக்கிறேன்.
10 வாக்குறுதிகள்:
1. நாடு முழுவதும், முதல் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும்
2. அனைவருக்கும் இலவச கல்விக்கான ஏற்பாடுகளை செய்து தரப்படும். மேலும் தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிகளை சிறந்ததாக மாற்றுவோம்.
3. தனியார் மருத்துவமனைகளுக்கு இணையாக அரசு மருத்துவமனைகளில் உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள் உருவாக்கப்படும்.
4. இந்தியாவின் நிலம் சீனாவிடம் இருந்து விடுவிக்க வேண்டும்,
5. நரேந்திர மோடி அரசால் தொடங்கப்பட்ட அக்னிவீர் திட்டம் கைவிடப்படும்.
6. “இந்தியக் கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு, இந்த உத்தரவாதங்கள் நிறைவேற்றப்படுவதை உறுதி செய்வேன் என்று அவர் கூறினார்.
7. டெல்லிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்கப்படும்.
8. ஆண்டுக்கு இரண்டு கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்க திட்டமிட்டுள்ளது.
9. நாட்டை ஊழலில் இருந்து விடுவிப்போம்
10. சரக்கு மற்றும் சேவை வரி ( GST ) முறைகள் எளிமையாக்கப்படும்
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக அமலாக்கததுறையால் கைது செய்யப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால், கடந்த மே 10 ஆம் தேதி இடைக்கால ஜாமினில், சிறையில் இருந்து வெளியே வந்தார். நான் திரும்பி வந்துவிட்டேன். என்னிடம் உள்ள அனைத்தையும் கொண்டு சர்வாதிகாரத்திற்கு எதிராக நான் போராடுகிறேன் என தெரிவித்தார் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்.
Also Read: சூரத், இந்தூரை தொடர்ந்து புரியிலும் பாஜக பார்முலாவா? தேர்தலில் இருந்து விலகிய காங்கிரஸ் வேட்பாளர்!