அதிமுகவின் செயற்குழு கூட்டம் இன்னும் சில நிமிடங்களில் தொடங்க உள்ளது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் தலைமையில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் செயற்குழுவில் இடம்பெற்றுள்ள முக்கிய நிர்வாகிகள் பலரும் பங்கேற்க உள்ளனர். 


கட்சியின் முக்கிய முடிவுகள் பெரும்பாலும் செயற்குழுவில் தான் எடுக்க முடியும். செயற்குழு உறுப்பினர்கள் ஒப்புதல் பேரில் தான் முடிவுகள் எட்ட முடியும். அந்த வகையில் அதிமுக செயற்குழுவில் முக்கியதீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் முக்கிய முடிவாக, அதிமுகவின் பொதுச் செயலாளர் என அறிவித்து வரும் சசிகலா மீது நடவடிக்கை எடுப்பது குறித்த தீர்மானம் நிறைவேற்றவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 




மேலும் அதிமுகவின் கொடியை பயன்படுத்தும் சசிகலா மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க இன்று தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி, நகராட்சி உள்ளாட்சி தேர்தல் வரவிருக்கும் நிலையில், அது தொடர்பான முடிவுகளை எடுப்பதில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்களின் அதிகாரத்தை மேலும் விரிவாக்கம் செய்யும் தீர்மானமும் நிறைவேற்றப்பட உள்ளது. 


அதிமுக சார்பில் நியமிக்கப்பட்ட வழிகாட்டு குழுவை கலைப்பதற்கான முக்கிய தீர்மானத்தை நிறைவேற்றவும் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. வழிகாட்டு குழுவில் இடம் பெற்றிருந்த முன்னாள் எம்.எல்.ஏ., மாணிக்கம், பாஜகவில் இணைந்த நிலையில், வழிகாட்டு குழு மீதான விமர்சனம் கடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எழுந்தது. எனவே வழிகாட்டுதல் குழுவை கலைக்க ஓபிஎஸ்-இபிஎஸ் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. 


இது தவிர இன்னும் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்ற முடிவு செய்திருப்பதாக அதிமுக வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வருகிறது. 




நிறைவேற்ற வாய்ப்புள்ள முக்கிய தீர்மானங்கள் சில...


• அதிமுக கொடியையும் பொதுச்செயலாளர் என்ற பதவியையும் பயன்படுத்தும் சசிகலா மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட வாய்ப்பு


• நகர்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற வேண்டி தீர்மானம்


• திமுக அரசை கண்டித்து தீர்மானம்ங்கள் நிறைவேற்றப்பட உள்ளன



  • வழிகாட்டுதல் குழுவை கலைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்பு


இது தவிர கட்சியின் கட்டுப்பாட்டிற்கு இழுக்கு ஏற்படும் வகையில் யாரேனும் செயல்பட்டால், அவர்கள் மீது எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூட்யூபில் வீடியோக்களை காண  


 


மேலும் வாசிக்க: ”விருது கிடைச்சதே 25 வருஷங்களுக்குப் பிறகுதான் தெரியும்” : அலறவிட்ட பேய்ப்பட நாயகி ஓப்பன் டாக்..


 


‛டிச.5 மெரினாவுக்கு வாங்க...’ அதிமுக செயற்குழு கூடும் நிலையில் சசிகலா அழைப்பு!