✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Lok Shaba 2024:பாஜக முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு; பிரதமர் மோடி, அமித்ஷா எங்கு போட்டி?

செல்வகுமார்   |  02 Mar 2024 07:51 PM (IST)

BJP Candidates: நாடாளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது பாஜக

Lok Shaba 2024:பாஜக முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு; பிரதமர் மோடி, அமித்ஷா எங்கு போட்டி?

பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் போட்டி

இன்னும் சில நாட்களில் மக்களவை தேர்தலுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படவுள்ளது. இந்நிலையில், தேர்தல் நெருங்கி வருவதையொட்டி, ஒவ்வொரு கட்சியும், வேட்பாளர்களை நிறுத்துவது, கூட்டணி கட்சிகளை அமைப்பது உள்ளிட்ட செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாஜக முதற்கட்ட பட்டியல்:

இந்நிலையில் ஆளும் கட்சியாக உள்ள பாஜக, மக்களவை தேர்தலுக்கான, 195 தொகுதிக்கான முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது. 

பிரதமர் நரேந்திர மோடி 3வது முறையாக வாரணாசி தொகுதியில் போட்டியிடுவதாக பாஜக அறிவித்துள்ளது. உள்துறை அமைச்சர் அமித்ஷா  குஜராத் மாநிலம் காந்திநகர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

Also Read: Power Pages-5: பிறந்த இடத்தில் தோல்வி; 3 முறை பிரதமர்; 2 முறை ஆட்சி கவிழ்ப்பு: தெரியுமா வாஜ்பாய் வரலாறு

  • நடிகர் சுரேஷ் கோபி கேரள மாநிலம் திருச்சூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
  • ஜோதிராதித்ய சிந்தியா மத்திய பிரதேசத்தில் உள்ள குணா தொகுதியில் போட்டியிடுகிறார்.
  • மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் - கேரள மாநிலம் திருவனந்தபுரம் தொகுதி
  • மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா- குஜராத் மாநிலம் போர்பந்தர் தொகுதி
  • சபாநாயகர் ஓம் பிர்லா - ராஜஸ்தான் மாநிலம் கோட்டா தொகுதி 
  • மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி - உத்தர பிரதேசம் அமேதி தொகுதி
  • எம்.பி ஹேமா மாலினி - உத்தர பிரதேசம் மதுரா தொகுதி

இந்த பட்டியலில் 34 அமைச்சர்கள் மீண்டும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த முதற்கட்ட பட்டியலில் தமிழ்நாடு இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

195 தொகுதி:

முதற்கட்ட பட்டியலான 195 தொகுதியில், உத்தரப் பிரதேசத்தில் 51 இடங்களுக்கும், மேற்கு வங்கத்தில் 20, இடங்களுக்கும், மத்தியப் பிரதேசத்தில் 24 இடங்களுக்கும், குஜராத் மற்றும் ராஜஸ்தானில் தலா 15 இடங்களுக்கும், கேரளாவில் 12, தெலங்கானாவில் 9, அசாமில் 11, ஜார்கண்ட் மற்றும் சத்தீஸ்கரில் தலா 11 இடங்களுக்கும், டெல்லியில் இருந்து 5 இடங்களுக்கும், ஜம்மு காஷ்மீரில் 2 இடங்களுக்கும், உத்தரகாண்டில்  3 இடங்களுக்கும், அருணாச்சல பிரதேசத்தில் 2 இடங்களுக்கும் மற்றும் கோவா, திரிபுரா, அந்தமான் & நிக்கோபார் மற்றும் டையூ & டாமனில் இருந்து தலா ஒரு இடங்களுக்கும் வேட்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது.

இந்த பட்டியலில் 47 இளைஞர் வேட்பாளர்கள், 28 பெண்கள், 27 எஸ்.சி வேட்பாளர்கள், 18 எஸ்.டி வேட்பாளர்கள் மற்றும் 57 ஓபிசி வேட்பாளர்கள் உள்ளனர் என பாஜக தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் பாஜகவுடனான கூட்டணி உறுதியாகாத நிலையில், தொடர்ந்து பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருக்கிறது. கூட்டணி உறுதியான பின்பு, கூட்டணி கட்சிகளுக்கான இடங்கள் உறுதி செய்யப்பட்ட பின்புதான், தமிழ்நாட்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளிவரும் .

Published at: 02 Mar 2024 06:31 PM (IST)
Tags:BJPlok shabaelection 2024PM MODILok Sabha electionsbjp candidates
  • முகப்பு
  • தேர்தல் 2024
  • Lok Shaba 2024:பாஜக முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு; பிரதமர் மோடி, அமித்ஷா எங்கு போட்டி?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.