சென்னையில் டி.ஜி.பி. அலுவலகத்திற்கு நேரில் சென்ற முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் வரும் 11-ந் தேதி நடைபெறும் பொதுக்குழு கூட்டத்திற்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று மனு அளித்தார்.


பின்னர், நிருபர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது, அவரிடம் அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை விவகாரம் சர்ச்சை எடுத்துள்ள நிலையில், ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இருவருமே தேவையில்லை. சசிகலா தலைமை வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் கூறி வருவது குறித்து கேட்கப்பட்டது. 




அதற்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “ தினகரனும், சசிகலாவும் ஒரு வண்டியை எடுத்துச் சுற்றுவது வீண் முயற்சி. தினகரனும் ஒரு வண்டியை எடுத்துக்கொண்டு சுற்றுகிறார். சசிகலா ஒரு வாகனத்தை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டனர். இது எல்லாமே வீண் முயற்சி. நேர வீண். சக்தியை வீணடித்துக்கொண்டிருக்கின்றனர். எரிபொருளை வீணடிக்கும் செயல்.


மேலும் படிக்க : ABP நாடு EXCLUSIVE: ஓபிஎஸ்.,யை ஓரங்கட்ட 16 தீர்மானங்கள் ரெடி... என்னென்ன என்பதை வெளியிடும் ABP நாடு!


டீசல் விலை ஏறிக்கொண்டே இருக்கும் சூழ்நிலையில், இப்படி வண்டியை எடுத்துக்கொண்டு சுற்றுவது நியாயமா..? இருக்கும் பணத்தை வைத்துக்கொண்டு அங்கங்கு ஒரு பகுதியில் செயற்கையாக ஆட்களை தயார் செய்து வைத்து வாழ்க, வாழ்க என்று கத்துகின்றனர். அதனால், அவர்கள் அ.தி.மு.க. என்றாகிவிட முடியுமா? “ என்று கேள்வி எழுப்பினார்.




அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்து எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களால் ஓ.பன்னீர்செல்வம் ஓரங்கட்டப்பட்டுள்ளார். வரும் 11-ந் தேதி நடைபெற உள்ள பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்வு செய்ய அவரது ஆதரவாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.


இந்த நிலையில், அ.தி.மு.க.வை மீட்க சசிகலா புரட்சிப்பயணம் என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அவருக்கு ஆதரவாக பல்வேறு இடங்களிலும் அவரது தொண்டர்களும் அவரை வாழ்த்தி வரவேற்று வருகின்றனர்.


மேலும் படிக்க : பொதுக்குழுவில் குழப்பத்தை ஏற்படுத்த சமூகவிரோதிகள் முயற்சி - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்


மேலும் படிக்க : ஓபிஎஸ் உடன் சேர்ந்து, வாங்கிய கூலிக்கு வேலை செய்கிறார் மருது அழகுராஜ் .. விளாசிய ஜெயக்குமார்


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண