அதிமுக பொதுக்குழு கூட்டம் வரும் 11- ஆம் தேதி நடைபெற இருக்கிறது. அ.தி.மு.க. கட்சியில் தொடர்ந்து நீடிக்கும் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள், ஈ.பி.எஸ். ஆதரவாளர்கள் சர்ச்சை இன்னும் முடிவுக்கு வந்தபாடில்லை. இந்நிலையில், நடைபெற இருக்கும் பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு அ.தி.மு.க. சார்பில் அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இருந்து அனுப்பப்பட்ட அழைப்பிதழ் தேனி பெரியக்குளத்தில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் வீட்டில் அழைப்பிதழ் பெற்றுக்கொள்ளப்பட்டாதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொருளாளர் என்று குறிப்பிட்டு அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் அழைப்பிதல் அனுப்பியுள்ளனர்.


ஓ.பன்னீர்செல்வம் பொருளாளர் என்ற பெயரில் கட்சியில் வரவு- செலவு கணக்கை தாக்கல் செய்ய அவர் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பார் என எதிர்பார்ப்பு எழுந்தது.


மேலும், அழைப்பிதழ் 15 நாட்களுக்கு முன்னதாகவே அனுப்பப்பட்டிருக்க வேண்டும் என்ற கருத்தும் எழுந்துள்ளது.  



மறுத்த ஓ.பன்னீர்செல்வம் தரப்பு:


இந்ந்நிலையில் பொதுக்குழுவில் பங்கேற்க அழைப்பு குறித்து ஓ.பன்னீர்செல்வம் சார்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது. அதில், வரும் 11-ஆம் தேதி நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் நாங்கள் பங்கேற்க போவதில்லை என ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் பதில் அளித்துள்ளனர்.


 


மீண்டும் பொதுச் செயலாளர் பதவி


வரும் 11 ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுக்குழுக் கூட்டத்துக்கு தலைமைக் கழக நிர்வாகிகள் சார்பில் அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. இந்தப் பொதுக்குழுவில் அதிமுகவில் மீண்டும் பொதுச் செயலாளர் பதவி உருவாக்கப்படுவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. 


பொதுக்குழு அன்று அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்படவுள்ளதாக முன்னதாக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்திருந்தார்


ஒற்றைத் தலைமை போட்டி


அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சென்னை, வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டங்கள் ஜூன் 23 ஆம் தேதி சலசலப்புடன் நடைபெற்றது.


இக்கூட்டத்தில் 23 தீர்மானங்களைத் தவிர மற்ற எந்தத் தீர்மானங்களும் நிறைவேற்றப்படக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் முன்னதாக உத்தரவிட்டிருந்தது. ஆனால்,ஓபிஎஸ் ஒப்புதல் தந்த 23 தீர்மானங்களையும் பொதுக்குழு நிராகரிப்பதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.


இந்நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவை மீறி அவைத்தலைவர் தேர்வு செய்யப்பட்டதாகவும், எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ்,முன்னாள் அமைச்சர்கள் சிவி சண்முகம், ஜெயக்குமார்,திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் உத்தரவை மீறியதாகவும் சண்முகம் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண