ஏபிபி மற்றும் சி வோட்டர் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பின்படி, பிரதமர் பதவிக்கு பொருத்தமான நபர் யார் என்று நினைக்கிறீர்கள் என்று மேற்கு வங்காளம், குஜராத், மகாராஷ்ட்ரா, பஞ்சாப் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநில மக்களிடம் கேட்கப்பட்டது.
அதில், மேற்கு வங்கத்தில் 36.29 சதவீதமும், குஜராத்தில் 46.03 சதவீதமும், மகாராஷ்ட்ராவில் 44.14 சதவீதமும், பஞ்சாப் மாநிலத்தில் 12.67 சதவீதமும், தமிழ்நாட்டில் 22.04 சதவீதமும் தற்போதைய பிரதமர் நரேந்திர மோடியே அந்த பதவிக்கு தகுதியான நபர் என்று கருத்து தெரிவித்துள்ளனர். குறிப்பிட்ட இந்த மாநிலங்களில் எடுத்த கருத்துக்கணிப்பில் மோடிக்கு ஆதரவாக 41.99 சதவீத மக்கள் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்.
அவருக்கு அடுத்தபடியாக, முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பிரதமராக தகுதியான நபர் என்று மேற்கு வங்காளத்தில் 3.49 சதவீத மக்களும், குஜராத்தில் 10.15 சதவீத மக்களும், மகாராஷ்ட்ராவில் 12.36 சதவீத மக்களும், பஞ்சாப் மாநிலத்தில் 3.56 சதவீத மக்களும், தமிழ்நாட்டில் 23.04 சதவீத மக்களும் என்று தெரிவித்துள்ளனர். குறிப்பிட்ட இந்த மாநிலங்களில் எடுத்த கருத்துக்கணிப்பில், பிரதமர் பதவிக்கு ராகுல்காந்தி தகுதியான நபர் என்று 11.56 சதவீத மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தற்போதைய காங்கிரஸ் தலைவரும், மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் மனைவியுமான சோனியாகாந்தி பிரதமர் பதவிக்கு தகுதியான நபர் என்று மேற்கு வங்காளத்தில் 0.43 சதவீத மக்களும், குஜராத்தில் 0.68 சதவீத மக்களும், மகாராஷ்ட்ரா மாநிலத்தில் 2.91 சதவீத மக்களும், பஞ்சாப் மாநிலத்தில் 0.76 சதவீத மக்களும், தமிழ்நாட்டில் 4.45 சதவீத மக்களும் ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர். குறிப்பிட்ட இந்த மாநிலங்களில் அவருக்கு ஆதரவாக 2.13 சதவீத மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதுதவிர, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்தான் பிரதமர் பதவிக்கு தகுதியான நபர் என்று மேற்கு வங்காளத்தில் 7.48 சதவீத மக்களும், குஜராத்தில் 7.01 சதவீத மக்களும், மகாராஷ்ட்ரா மாநிலத்தில் 6.55 சதவீத மக்களும், பஞ்சாப் மாநிலத்தில் 19.89 சதவீத மக்களும், தமிழ்நாட்டில் 8.35 சதவீத மக்களும் ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர். குறிப்பிட்ட இந்த மாநிலங்களில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்தான் பிரதமர் பதவிக்கு தகுதியான நபர் என்று 6.5 சதவீத மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தற்போதைய உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பிரதமர் பதவிக்கு தகுதியானவர் என்று குஜராத்தில் 3.19 சதவீத மக்களும், மகாராஷ்ட்ராவில் 1.22 சதவீத மக்களும், பஞ்சாபில் 0.6 சதவீத மக்களும் கருத்து தெரிவித்துள்ளனர். மேற்கு வங்காளம் மற்றும் தமிழ்நாட்டில் அவர் பிரதமர் ஆக வேண்டும் என்று பூஜ்ஜியம் சதவீத ஆதரவுதான் பதிவாகி உள்ளது. குறிப்பிட்ட இந்த மாநிலங்களில் யோகி ஆதித்யநாத் பிரதமராக வேண்டும் என்று 2.06 சதவீத மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.