கொரோனா நோய்த் தொற்றுக்கு எதிராக தடுப்பூசி போட்டுக் கொள்வதில் 70 சதவிகிதத்துக்கும் அதிமான இந்திய மக்கள் ஆர்வமாக உள்ளனர் என ABP மற்றும் சிவோட்டர் நடத்திய மெகா கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.
2021 MOOD OF THE NATION கருத்துக்கணிப்பு முடிவுகளை சிவோட்டர் குழுமத்துடன் இணைந்து ஏபிபி செய்தி நிறுவனம் வெளியிட்டது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகள், எதிர்க்கட்சித் தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகள் குறித்தும் நாடு மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.
இதில், தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வு குறித்த பல கேள்விகள் இடம்பெற்றன. தடுப்பூசி பற்றி பெருவாரியான மக்களிடையே விழிப்புணர்வும், அதை போட்டுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் மக்களிடத்தில் உள்ளதாக கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
1. பொது மக்கள் பயன்பாட்டுக்கு தடுப்பூசி வந்தால், நீங்கள் போட்டுக் கொள்வீர்களா?
Date | வெள்ளிகிழமை , மே 14, 2021 |
கண்டிப்பாக போட்டுக் கொள்வேன் | 72.8 |
போட்டுக் கொள்வென் | 10.7 |
போட்டுக் கொள்ளமாட்டேன் | 2.5 |
கட்டாயம் போட்டுக் கொள்ள மாட்டேன் | 10.3 |
தெரியவில்லை | 3.7 |
Total | 100% |
Total : போட்டுக் கொள்பவர்கள் | 83.5 |
Total : போட்டுக் கொள்ளத்தவர்கள் | 12.8 |
போட்டுக் கொல்வபர்கள் நிகர எண்ணிக்கை . | 70.7 |
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டர்வர்களின் எண்ணிக்கை 85 லட்சமாக கடந்துள்ளது. இதல், 20,00,507 பேர் மட்டுமே இரண்டு தடுப்பூசி டோஸ்களை போட்டுக் கொண்டுள்ளனர்.
2. தடுப்பூசிகள் பாதுகாப்பானது என்று நம்புகிறீர்களா?
தேதி | வெள்ளிகிழமை , மே 14, 2021 |
கண்டிப்பாக நம்புகிறேன் | 48.8 |
நம்புகிறேன் | 22 |
நம்பவில்லை | 3.3 |
கண்டிப்பாக நம்பவில்லை | 9.7 |
பதில் தெரியவில்லை | 16.2 |
மொத்தம் | 100% |
நம்புவோர்கள் மொத்த எண்ணிக்கை | 70.8 |
நம்பிக்கை இல்லாதவர்கள் மொத்த எண்ணிக்கை | 13 |
நம்புவர்களின் நிகர எண்ணிக்கை | 57.8 |
அஸ்ட்ரா ஜெனிகா /ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திலிருந்து தொழில்நுட்ப பரிமாற்றம் மூலம் ‘கோவிஷீல்டு' தடுப்பூசியை இந்திய சீரம் மையம் தயாரித்து வருகிறது.
இந்தியாவில் 1600 பங்கேற்பாளர்களிடம் 2 மற்றும் 3ம் கட்ட மருத்துவ பரிசோதனையை சீரம் நிறுவனம் நடத்தியது. ஒட்டுமொத்த தடுப்பூசி செயல்திறன் 70.42 சதவீதம் என கண்டறியப்பட்டது. பாரத் பயோக் டெக் நிறுவனம், கோவாக்சின் என்ற தடுப்பூசியை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்(ஐசிஎம்ஆர்) மற்றும் புனேவில் உள்ள தேசிய வைராலாஜி மையத்துடன் இணைந்து உருவாக்கியது. இந்த தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் திறன் இந்திய அளவிலும் உலகளவிலும் சிறப்பாக இருந்தது.
3. கொரோனா தடுப்பூசி நீங்கள் பின்பற்றும் மத நம்பிக்கையுடன் ஒத்துப்போகிறதா?
தேதி | புதன்கிழமை , மே 26, 2021 |
நிச்சயமாக | 53.6 |
ஆம் | 10.1 |
இல்லை | 5.1 |
நிச்சயமாக ஒத்துப்போகவில்லை | 18.8 |
பதில் தெரியவில்லை | 12.4 |
மொத்த எண்ணிக்கை | 100% |
மொத்தம் : ஒத்துப்போகிறது | 63.7 |
மொத்த : ஒத்துப்போகவில்லை | 23.9 |
ஒத்துப் போகிறது நிகர எண்ணிக்கை: | 39.8 |
கருத்துக்கணிப்பில், கலந்து கொண்டவர்களில் 53.6% பேர் கொரோனா தடுப்பூசி தாங்கள் பின்பற்றும் மத நம்பிக்கைகளுடன் ஒத்துப்போவதாக தெரிவித்துள்ளனர். இவர்களின் நிகர எண்ணிக்கை 39.8 சதவிகிதமாக உள்ளது.
தமிழகத்தில், மேற்கு வங்கம், மகாராஷ்டிர போன்ற மாநிலங்களில் கொரோனா வைரசை அரக்கணாக நினைத்து வதம் செய்யும் மதசடங்குகளை செய்து வருகிறனர். தமிழகத்தில், கோவை, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு காணிக்கை செய்தும், கொரோனாவை தேவியாகவும் வழிபட்டு வருகின்றனர்.
சுதந்திரத்துக்கு முன்பாக, அம்மை நோய்த் தொற்றுக்கு தடுப்பூசி எடுத்துக் கொள்ள தமிழர்கள் தயக்கம் காட்டியதை கண்டறிந்த ஆங்கிலேயர்கள், தடுப்பூசியில் இருப்பது அம்மன் என்று விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டனர். தமிழகத்தில் அம்மை நோய்களை ஒழித்ததில், மேற்கத்திய அறிவியலுக்கு இருந்த அதே பங்கு, தமிழர்களின் அம்மன் வழிபாடுகளுக்கும் இருந்துள்ளது.100 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் மேற்கத்திய அறிவியலும், கிராமப்புற வழிபாடுகளும் ஒன்றிணைக்கப்பட்டன.
மேலும், விவரங்களுக்கு: Constructing Goddess Worship: Colonial Ethnographic and Public Health Discourses in South India by
Perundevi Srinivasan