பிறரின் உயிரைக் காப்பாற்றிய வீரன்… இன்று தன்னுயிரை காக்க உதவி கோரல்...!
கொடிய விஷபாம்புகளிடம் இருந்து பலரது உயிரை காத்த இளைஞரை பாம்பு கடித்து ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மருத்துவ உதவி கேட்டு கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கொடிய விஷபாம்புகளிடம் இருந்து பலரை காத்த சீர்காழி இளைஞரை பாம்பு கடித்து ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மருத்துவ உதவி கேட்டு கோரிக்கை வைத்துள்ளனர்.
படை நடுங்க வைக்கும் பாம்புகள்
பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள். அதற்கு காரணம் பாம்பின் கொடிய விஷத்தன்மை, இதனால் பலரும் பாம்பு கடித்து உயிரை இழக்கும் சம்பவம் காலம் காலமாக நடந்து வரும் நிகழ்வுகளில் ஒன்று. உலகம் தோன்றிய நாள் முதல் பரினாம வளர்ச்சியும் படிப்படியாக காடுகள் அழிக்கப்பட்டு மனித வாழ்விடம் அமைப்பதற்காக கட்டிடங்கள் உருவாகி காடுகளின் அளவு குறைய தொடங்கியது. இதன் காரணமாக காடுகளில் வாழ்ந்த ஜீவராசிகள் அவர்களின் வழி தடம் தேடி நகர தொடங்குகின்றன.

வாழ்விடம் தேடி அலையும் ஜீவராசிகள்
அவ்வாறு விலங்குகள் தங்கள் வாழ்விடத்தை இழந்த அவர்கள் வாழ்ந்த வழி தடங்களில் செல்ல தொடங்குகின்றன, அவ்வாறு அவர்கள் செல்லும் பாதைகளில் தற்போது மனிதர்களின் ஆக்கிரமிப்பு வீடுகள் , கட்டிடங்கள், தோட்டங்கள் என அதிகரித்ததன் விளைவாக விலங்குகளின் சீற்றத்திற்கு மனிதர்கள் ஆளாகும் சூழலை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர். அதற்கு உதாரணமாக யானைகளால் மனிதர்கள் தாக்கப்படுவதை வாழை கரும்பு போன்ற தோட்டங்களும், வயல்களும் சேதம் படுத்தும் நிகழ்வும், இதுபோன்று புலிகள் போன்ற விலங்குகளால் மனிதர்கள் கொல்லப்படும் நிகழ்வும் நடந்தேறும் செய்திகளை நாம் அன்றாடம் செய்தி ஊடகங்கள் வழியை அறிந்து வருகிறோம்.
TN 12th Exam: முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு; விடைத்தாள் திருத்தம் எப்போது? தேர்வு முடிவுகள்?
பாம்பு பிடிவீரர் புளிச்சக்காடு தினேஷ்குமார்
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புளிச்க்காடு பகுதியை சேர்ந்த இளைஞர் தினேஷ்குமார். இவர் சிலம்பம் உள்ளிட்ட தற்காப்பு கலை பயிற்றுநரான இவர் அப்பகுதி உள்ள பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவசமாக தற்காப்பு கலையினை கற்றுத்தருகிறார். மேலும் கொரோனா காலத்தில் ஏராளமான ஏழை குடும்பங்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளையும் செய்துள்ளார். மேலும் தன்னால் முயன்ற பல்வேறு சமூக சேவைகளிலும் ஈடுப்பட்டு வருகிறார். இவர் சிறுவயது முதலே அவ்வப்போது அவர்வசிக்கும் பகுதிகளில் உள்ள வீடுகளில் புகுந்த பாம்புகளை லாவகமாக பிடித்து பாதுகாப்பான வனப்பகுதியில் விட்டு வருகிறார். இதுவரை 5000 க்கும் மேற்பட்ட பாம்புகளை பத்திரமாக மீட்டு வனப்பகுதியில் விட்டுள்ளார்.
தினேஷ்குமாரை தீண்டிய விஷப்பாம்பு
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு வீட்டின் உள்ளே புகுந்த கொடிய விஷம் கொண்ட பாம்பு ஒன்றை பிடித்த போது எதிர்பாராத விதமாக அந்த பாம்பு தினேஷ்குமாரை கடித்துள்ளது. இதனால் பாம்பின் விஷம் உடல் முழுவதும் பரவி கடந்த சில மாதங்களாக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சூழலில் தற்போது அவருக்கு 18 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஊசி 12 அவருக்கு செலுத்த வேண்டியுள்ளதால் ஏழை குடும்பத்தை சேர்ந்த அவரது உறவினர்கள் தற்போது மருந்துவ உதவி கோரியுள்ளனர். வீடுகளுக்குள் புகுந்த கொடிய விஷத்தன்மை கொண்ட பல பாம்புகளை பிடித்து பலரது உயிரைக் காப்பாற்றிய தினேஷ்குமாரின் உயிரை காக்க அவரால் பயன்பெற்றவர்கள் முன்வரவேண்டும் என சமூக ஆர்வலர்கள் பலரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.