மயிலாடுதுறையில் தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை தலைவர்களின் ஒருவரான சுதந்திர போராட்ட வீரமங்கை.வேலுநாச்சியரின் 295 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்ட தவெகவினர் மாவட்ட தலைவர் குட்டி கோபி தலைமையில் அவரது திரு உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தனர்.


தவெகவின் கொள்கை தலைவர் 


நடிகர் விஜய் கடந்த ஆண்டு பிப்ரவரி 2-ஆம் தேதி தனது ரசிகர் மன்றமான விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றி அதற்கு தமிழக வெற்றி கழகம் என அறிவித்தார். அதனைத் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்தக் கட்சியின் கொள்கைத் தலைவர்களாக, சுதந்திர போராட்ட வீரமங்கை வேலு நாச்சியார், அஞ்சலை அம்மாள், தந்தை பெரியார், காமராஜர், பாபாசாகேப் அம்பேத்கர் ஆகியோரை கொள்கைத் தலைவர்களாக அறிவித்தார் அக்கட்சியின் தலைவர் விஜய். இதற்கான காரணத்தையும் தனது கட்சியின் முதல் மாநில மாநாட்டில் தெரிவித்தார்.


Top 10 bikes in india 2024: கடந்த ஆண்டு வெளியான இருசக்கர வாகன டாப் 10 பட்டியல்




தவெகவினர் கொண்டாட்டம் 


இந்நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை தலைவர்களில் ஒருவரான சுதந்திர போராட்ட வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களின் 295 வது பிறந்த நாள் இன்று நாடுமுழுவதும் கொண்டாடப்படுகிறது. அதனை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தவெகவினர் அவரது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர்.


TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?




தவெக தலைவர் விஜயின் பதிவு 


இது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் விஜய் அவரது எக்ஸ் தளத்தில் ஆங்கிலேயர்களுடன் சண்டையிட்டுச் சொந்த மண்ணை மீட்டெடுத்து, விடுதலைப் போராட்டத்தில் நாட்டுக்கே முன்னோடியாகப் போர்க்களத்தில் தீரத்துடன் களமாடிய எங்கள் கொள்கைத் தலைவி வீரமங்கை ராணி வேலு நாச்சியார் அவர்களின் பிறந்த தினத்தையொட்டி, சென்னை, பனையூரில் உள்ள எமது கழகத்தின் தலைமை நிலையச் செயலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினேன். வீரமங்கை வேலு நாச்சியார் அவர்களது பிறந்த நாளில், பெண்ணுரிமை போற்றுவோம், பெண்களின் நலன்கள் காப்போம், பெண்களின் பாதுகாப்பிற்கு எப்போதும் அரணாக இருப்போம் என்று உறுதி ஏற்போம்" என பதிவிட்டுள்ளார். இதனை தமிழக வெற்றிக் கழகத்தினர் வேகமாக இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.


China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!




மயிலாடுதுறையில் மரியாதை 


அதன் ஒரு நிகழ்வாக மயிலாடுதுறை மாவட்டம் தவெகவினர் மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு வீரமங்கை வேலுநாச்சியாரின் திருவுருவ படத்தை நிறுவி மலர் தூவி மரியாதை செலுத்தினர். மயிலாடுதுறை மாவட்ட தமிழக வெற்றி கழக தலைவர் குட்டி கோபி தலைமையில் பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட அக்கட்சியை சேர்ந்தவர்கள் வீரமங்கை வேலுநாச்சியாரின் திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.