Mayiladuthurai Power Shutdown: மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை (04.01.2025) மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பல இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது. 


மாதாந்திர மின் பராமரிப்பு பணி 


தமிழகத்தில் பராமரிப்பு பணிக்காக மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும். பராமரிப்பு பணிக்காக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட பகுதியில் மின்சேவை நிறுத்தப்படும். வழக்கமாக காலை 9 அல்லது 10 மணியிலிருந்து மாலை 5 மணிவரை அல்லது 9 காலை மணி முதல் மதியம் 2 மணிவரை மின்சார பராமரிப்பு பணிகளுக்கான மின்சேவை நிறுத்தம் செய்யப்படும். இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம். 


சீர்காழி மின் கோட்ட மின்வாரிய செய்தி குறிப்பு 


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மின் கோட்டத்திற்கு உட்பட்ட துணை மின் நிலையங்களில் நாளை 04.01.2025 சனிக்கிழமை காலை 9 மணிமுதல் மாலை 5 வரை மின் பராமரிப்பு பணிக்காக மின் நிறுத்தம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


சீர்காழி மின்வாரிய கோட்டத்திலும் நாளை தினம் வைத்தீஸ்வரன்கோயில், ஆச்சாள்புரம், அரசூர், எடமணல் மற்றும் திருவெண்காடு ஆகிய துணைமின் நிலையங்களில் உயரழுத்த மின்பாதைகளில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் மேற்கண்ட இந்த உயரழுத்த மின்பாதைகளில் இருந்து மின்விநியோகம் பெறும் கீழ்கண்ட பகுதிகளில் மின்சாரம் இருக்காது என சீர்காழி மின்வாரிய கோட்ட உதவி செயற் பொறியாளர்கள் ராஜா, விஜயபாரதி மற்றும் சரவணன் ஆகியோர் தெரிவித்துள்ளார்.


மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் 


திருக்கோலக்கா, P.K ரோடு, கோவில்பத்து, கொள்ளிடம் முக் கூட்டு, இரணியன்நகர், விளந்திடசமுத்திரம், புளிச்சகாடு, மாதானம், அரசாளமங்கலம், உமையாள்பதி, நல்லநாயகபுரம் வேம்படி, திருமுல்லைவாசல், காப்பியக்குடி, அரசூர், ஆர்பாக்கம், ஒதவந்தான்குடி, கூத்தியாம்பேட்டை, திருவெண்காடு நகர், பெருந்தோட்டம், எம்பாவை, திட்டை, செம்மங்குடி, கடவாசல், வடகால், திருக்கருக்காவூர், குளத்திங்கநல்லூர், விநாயக்குடி, கீராநல்லூர், புங்கனூர், பெருமங்கலம், கற்கோயில், மருவத்தூர், மருதங்குடி, அரூர், ஆலஞ்சேரி, கொண்டல், கீழதேனூர், ஆதமங்கலம், மணி கிராமம், புதுகுப்பம், நெய்தவாசல், தருமகுளம், பூம்புகார், வாணகிரி, வள்ளியம்மை நகர், தில்லையாடி, தொடரிபேட்டை, டி.மணல்மேடு, திருவிடைக்கழி, கண்ணங்குடி, கிள்ளையூர், மாத்தூர், முக்கரும்பூர், நட்சத்திரமாலை, சிவகசிந்தாமணி, செம்பதனிருப்பு, அல்லிவிளாகம் மெயின்ரோடு, மேமாத்தூர், சாத்தனூர், மேலகட்டளை, கீழபரசலூர், பரசலூர் நல்லாடைரோடு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 வரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய அலுவலக செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


அதேபோன்று தமிழ்நாடு மின் வாரிய மயிலாடுதுறை கோட்ட உதவி செயற் பொறியாளர்கள் கலியபெருமாள் மற்றும் பாலமுருகன் ஆகியோர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் மயிலாடுதுறை துணைமின் நிலையத்தில்நாளை 04.01.2025 சனிக்கிழமை அன்று பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் மயிலாடுதுறை துணை மின் நிலையத்தில் இருந்து மின்விநியோகம் செய்யப்படும், பெசன்ட் நகர், டவுன் ஸ்டேஷன் ரோடு, மயூரநாதர் கோயில் மேற்கு தெரு, தெற்கு பட்டமங்கலத்தெரு, கச்சேரி ரோடு பெரம்பூர், வதிஷ்டாச்சேரி, முத்தூர், கடக்கம், கோவாஞ்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டார  பகுதிகளில் நாளை 04.01.25 சனிக்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மாறுதலுக்கு உட்பட்டது 


மேலும் அன்றையதினம் மின்நிறுத்தம் செய்வது மின்கட்டமைப்பு மற்றும் இதர காரணங்களைப் பொறுத்து கடைசி நேர மாறுதலுக்குட்பட்டலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து பொதுமக்கள் தங்கள் மின்சாரம் சார்ந்த தேவைகளை முன்னாக திட்டமிட்டு ஏற்படும் சிரமங்களை தவிர்த்துக்கொள்ள அறிவுத்தப்பட்டுள்ளது.