பிரசித்தி பெற்ற திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி‌.தினகரன் தனது 60 வயது பூர்த்தியடைந்ததை அடுத்து தனது மனைவி அனுராதாவுடன் சிறப்பு வழிபாடு மேற்கொண்டார்.  மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான உலக புகழ்பெற்ற பெற்ற பழமைவாய்ந்த ஸ்ரீ அபிராமி சமேத ஶ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. அப்பர், சுந்தர், சம்பந்தர் ஆகிய மூவரால் தேவாரப்பாடல் பெற்றதும்,


பெங்களூரில் அதிர்ச்சி; சினிமா பிரபலங்கள் அடிக்கடி செல்லும் உணவகத்தில் மர்மப்பொருள் வெடித்து 4 பேர் காயம்




பக்தர் மார்க்கண்டேயனுக்காக சிவபெருமான் காலசம்ஹாரமூர்த்தியாக எழுந்தருளி எமனை காலால் எட்டி உதைத்து சம்ஹாரம் செய்தது உள்ளிட்ட பல்வேறு புராண நிகழ்வுகளை உள்ளடக்கிய உலகப் புகழ்பெற்ற திருத்தலமாக இது விளங்கி வருகிறது . மேலும், அட்ட வீரட்ட தலங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. இத்தலத்தில் ஆயுள் ஹோமம் மற்றும் 60 வயது தொடங்குபவர்கள் உக்கிர ரத சாந்தி, 60 வயதில் பூர்த்தி அடைந்தவர்கள் சஷ்டியப்த பூர்த்தி, 70 வயதில் பீமரத சாந்தி, 80 வயது பூர்த்தி அடைந்தவர்கள் சதாபிஷேகம், 90 வயது அடைந்தவர்கள் கனகாபிஷேகம், 100 வயது பூர்த்தி அடைந்தவர்கள் பூர்ணாபிஷேகம் செய்து சுவாமி அம்பாளை வழிபட்டால் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது ஐதீகம். ஆண்டின் 365 நாட்களும் திருமணம் நடைபெறும் ஓரே தலம் இதுவாகும்.


Gyanvapi Mosque : ஞானவாபி விவகாரம்.. மசூதி கமிட்டியின் மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல்!




இத்தகைய பல்வேறு சிறப்பு வாய்ந்த திருக்கடையூர் அபிராமி அம்மன் உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோயிலுக்கு இன்று அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் தனது 60 வயது பூர்த்தியடைந்ததை அடுத்து அவரது மனைவி அனுராதாவுடன் வருகை வந்தார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் கோபூஜை, கஜ பூஜை செய்த பின்னர்  கோயிலுக்குள்ளே சென்று கள்ள வார்ண விநாயகர், ஸ்ரீ காலசம்கார மூர்த்தி, ஶ்ரீ அமிர்தகடேஸ்வரர் மற்றும் அபிராமி அம்மன் சன்னதியில் சென்று சிறப்பு அர்ச்சனை செய்து வழிபாடு  செய்தார்.


Michaung Relief Funds: மிக்ஜாம் புயல் நிவாரணம் இன்னும் கிடைக்கலையா? வங்கி கணக்கை சரி பாருங்க - இன்னிக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்!




அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்தித்த அவர் கூறியதாவது, ”60 வயது பூர்த்தி அடைந்ததை அடுத்து அமிர்தகடேஸ்வரர் அபிராமி அம்பாளின் அனுகிரகத்தை பெறுவதற்காக வந்துள்ளோம் என்றார். தொடர்ந்து கூட்டணி மற்றும் சின்னம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ஏற்கனவே எங்களுக்கு குக்கர் சின்னம் உள்ளது வதந்திகள், பொய் செய்திகள் மற்றும் யுகங்களை வைத்து கேட்காதீர்கள், கொஞ்சம் நாள் பொறுத்திருங்கள் உங்களது கேள்விகளுக்கு உறுதியான விடை கிடைக்கும். நானும், ஓபிஎஸ்யும் வருங்காலத்தில் அரசியலில் இணைந்து செயல்படுவோம் என ஏற்கனவே முடிவு எடுத்துள்ளோம். கூட்டணிக்காக சில கட்சிகளுடன் பேசிக் கொண்டிருப்பது உண்மை கூட்டணி குறித்த இறுதி வடிவம் எட்டிய பிறகு உங்களிடம் தெரிவிக்கிறோம்” என்றார்.


Manjummel Boys: “என்ன ஒரு சிறப்பான மேக்கிங்” - மஞ்சும்மல் பாய்ஸ் படத்தைப் பாராட்டி கார்த்திக் சுப்பராஜ் பதிவு!