பெங்களூரு ஒயிட் ஃபீல்ட் பகுதியில் உள்ள பிரபல உணவகத்தில் மர்மப் பொருள் வெடித்து 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதில் மூன்று பேர் ஆண்கள் ஒருவர் பெண் என்பது குறிப்பிடத்தக்கது. பெங்களூரு 80 அடி சாலையில் உள்ள ராமேஸ்வரம் கஃபேவிற்கு சினிமா பிரபலங்கள் அடிக்கடி செல்வார்கள் என்பதால் பெங்களூரில் உள்ள புகழ்பெற்ற உணவகங்களில் இதுவும் ஒன்று. இந்த உணவகம் பெங்களூரு 80 அடி சாலையில் அமைந்துள்ளது. இந்த கஃபேவில் வெடித்தது மர்மப் பொருளா அல்லது உணவகத்தில் வைக்கப்பட்டிருந்த சிலிண்டரா என்பது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்த விபத்து தொடர்பாக, ஒயிட் ஃபீல்டு தீயணைப்பு நிலைய அதிகாரி, “ராமேஸ்வரம் உணவகத்தில் சிலிண்டர் வெடித்ததாக எங்களுக்கு அழைப்பு வந்தது. நாங்கள் சம்பவ இடத்திற்கு வந்து நிலைமையை ஆராய்ந்து வருகிறோம்" என ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
மேலும் காயமடைந்தவர்களில் மூன்று ஊழியர்களும், ஒரு பெண் வாடிக்கையாளரும் அடங்குவர். இவர்கள் நான்கு பேரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து மார்ச் மாதம் 1ஆம் தேதி நண்பகல் 1.30 மணியில் இருந்து 2 மணிக்குள் நடந்திருப்பதாகவும், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தபோது தீ எதுவும் இல்லை. மேலும் தீ இல்லாததால் விபத்திற்கான காரணத்தை கண்டுபிடிக்கும் பணிகளில் துரிதமாக செயல்படத் தொடங்கினர்.
இந்த வெடி விபத்து சிலிண்டரால் ஏற்பட்டதா அல்லது வெடி குண்டா என்பதைக் கண்டறிய என்.ஐ.ஏ சோதனை நடைபெற்று வருகின்றது.