சின்னத்திரை ரசிகர்கள் எத்தனை எத்தனையோ தொகுப்பாளர் தொப்பாளினிகளை கடந்து வந்துள்ளனர். ஆனால் ரசிகர்கள் மத்தியில் ஒரு பட்டம்பூச்சியாய் என்றுமே ஃபேவரட்டான ஒரு ஆங்கராக சிறகடித்து கொண்டு இருப்பவர் பிரியங்கா தேஷ்பாண்டே. சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக் போன்ற ஏராளமான ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்கி வருகிறார். தனது துறுதுறுப்பான பேச்சாலும், சுட்டித்தனமான நடவடிக்கைகளாலும் அனைவரின் உள்ளங்களையும் கொள்ளை கொண்டவர். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்த பிரியங்கா மீடியாவில் அடியெடுத்து வைத்து 15 ஆண்டுகளை கடந்துவிட்டார். 




சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்று 15 இயர்ஸ் ஆஃப் பிரியங்கா என்ற நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது. அந்த நிகழ்ச்சியில் பிரியங்காவின் நெருங்கிய நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் பலர் கலந்து கொண்டு பிரியங்கா பற்றி பல விஷயங்களை பகிர்ந்து கொண்டு அந்த விழாவை மேலும் அழகுபடுத்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் பிரியங்கா குறித்து மனம் திறந்து பல விஷயங்களை பகிர்ந்து இருந்தார் பிரியங்காவின் அம்மா. அவர் மேடையில் பகிர்ந்த சில விஷயங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


பிரியங்கா தனது நீண்ட நான் நண்பரான பிரவீன் என்பவரை 2016-ஆம் ஆண்டு   காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் சமீப காலமாக பிரிந்து வாழ்த்து வருகிறார்கள். ஆனால் அவர்கள் பிரிந்து வாழ்வதை பற்றியோ கணவரை பற்றியோ எந்த இடத்திலும் பிரியங்கா பேசியது கிடையாது. பிரியங்காவும் பிரவீனும் அவர்களின் பிரிவு குறித்து அதிகாரபூர்வமான தகவலை இதுவரையில் வெளியிடவில்லை. 


பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு ரன்னர் அப்பாக இரண்டாவது இடத்தை பிடித்தார். பிக் பாஸ் நிகழ்ச்சில் கணவர் குறித்து ஏதாவது பேசுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்  பிரவீன் குறித்து பிரியங்கா நிகழ்ச்சியில் எந்த இடத்திலும் வாய் திறக்கவே இல்லை. ப்ரீஸ் டாஸ்க் சுற்றின் போது கூட பிரியங்காவின் கணவர் பிரவீன் வருவார் என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் பிரவீன் வராததே அவர்கள் இருவருக்கும் இடையில் ஏதோ பிரச்சினை இருப்பதை உறுதி செய்தது. 



அந்த வகையில் 15 இயர்ஸ் ஆஃப் பிரியங்கா நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது பிரியங்காவின் அம்மா மறைமுகமாக பிரியங்கா தனது கணவரை விட்டு பிரிந்து வாழ்வது பற்றி பேசி இருந்தார். தன்னுடைய கடந்த கால வாழ்க்கையில் செய்த தவறை போல இனி செய்யக்கூடாது. சரியான ஒன்றை தேர்ந்து எடுத்து மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை என பிரியங்காவின் அம்மா மேடையில் பேசிய விஷயம் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


 தனிப்பட்ட வாழ்க்கையில் எத்தனை மனவருத்தங்கள் இருந்தாலும் திரையில் அதை ஒரு போகும் வெளிக்காட்டாத தன்னம்பிக்கையான பெண்மணி பிரியங்கா தேஷ்பாண்டே என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்