மயிலாடுதுறை செயின்ட் பால்ஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1982 ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டுவரை கல்வி பயின்ற முன்னாள் மாணவிகளின் சங்கம விழாவில் பசுமை நிறைந்த நினைவுகளை பகிர்ந்து கொண்டு முன்னாள் மாணவிகள் தங்களை மறந்து சினிமா பாடலுக்கு குத்தாட்டம் போட்டு நடனமாடி கொண்டாடி மகிழ்ந்தனர்.


 1982 - 2010 பயின்ற மாணவிகள் 


மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மையப்பகுதியில் செயின்ட் பால்ஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. மயிலாடுதுறையில் மிகவும் பிரபலமான இப்பள்ளியில் முன்னாள் மாணவிகள் சங்கம விழா நடைபெற்றது. இந்த விழாவில் 1982 -ஆம் ஆண்டு முதல் 2010 -ஆம் ஆண்டு வரை 28 ஆண்டுகால இடைவெளியில் கல்வி பயின்ற முன்னாள் மாணவிகள் கலந்து கொண்டனர்.


Rohan Jaitley:அருண் ஜெட்லி மகனுக்கு அடிக்குமா ஜாக்பாட்.. தேடி வரும் பிசிசிஐ பதவி! வெளியான முக்கிய தகவல்




பல்வேறு பொறுப்புகளில் முன்னாள் மாணவிகள் 


இதில் பேராசிரியர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள், குடும்பத் தலைவி, நிறுவன தலைவர் போன்ற பல்வேறு நிலைகளிலும்  உள்ள முன்னாள் மாணவிகள் இந்த சங்கம விழாவில் ஒன்று கூடி ஒருவருக்கொருவர் நட்பை பரிமாறிக் கொண்டனர்.  நீண்ட நாட்களுக்குப் பின் சந்தித்து கொண்ட தோழிகள் அளவாலாவி மகிழ்ச்சி கடலில் ஆழ்ந்தனர்.
மேலும் தாங்கள் பயின்ற வகுப்புகளுக்கு சென்றும், பள்ளியை சுற்றி வந்து மலரும் நினைவுகளை நினைவு கூர்ந்து தங்கள் செல்பொனில் செல்ஃபி எடுத்துக்கொண்டும் சேர்ந்து அமர்ந்து உணவருந்தினர். 


கலைஞரின் நூறு ரூபாய் நாணயத்தை ப்ளாக் டிக்கெட் போல அதிக தொகைக்கு விற்கின்றனர் - செல்லூர் ராஜூ




மெய் மறந்து குத்தாட்டம் போட்ட முன்னாள் மாணவிகள் 


முன்னதாக விழா மேடையில் முன்னாள் மாணவிகள் சேர்ந்து சினிமா பாடலுக்கு குத்தாட்டம் போட்டு நடனமாடியது அனைவரையும் உற்சாகத்தியது. தொடர்ந்து  விளையாட்டுப் போட்டியில் ஆர்வமுடன் பங்கேற்று ஒரு நாள் குடும்ப வாழ்க்கையை மறந்து குதுகலம் அடைந்தனர். ஆண்டுதோறும் நடத்தப்படும் முன்னாள் மாணவர்களின் சங்கம விழா ஆறு ஆண்டுகளாக நிறுத்தப்பட்டு இருந்த நிலையில் தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள பள்ளித் தலைமை ஆசிரியர் சவரியம்மாள் மற்றும் உதவி தலைமை ஆசிரியர் ஜோஸ்பின் அலெக்சாண்டர்  நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து நடத்தினர். முன்னாள் மாணவியும், டிபிடிஆர் மேல்நிலைப்பள்ளி தலைமையாசியர் புஷ்பவள்ளி  தலைமையில் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஜெனிபர் பவுல்ராஜ் முன்னிலையில்  முன்னாள் மாணவிகளின் சங்கம விழா நடைபெற்றது.


UPS: ஏற்கவே முடியாத ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம், என்ன காரணம்? தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் பட்டியல்