மயிலாடுதுறை மாவட்டத்தில் மறைந்த நடிகரும் , தேமுதிக தலைவருமான விஜயகாந்த்க்கு தனது ரத்ததை கொண்டு படம் வரைந்து இளைஞர் ஒருவர் அஞ்சலி செலுத்தியுள்ள சம்பவம் மயிலாடுதுறை மாவட்டத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவால் நேற்று முன்தினம் (டிசம்பர் 28) காலை 6.10 மணியளவில் காலமானார். அவரது மறைவு மொத்த தமிழ்நாட்டையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. எவராலும் வெறுக்க முடியாத நபராக அனைவராலும் அன்போடு ’கேப்டன்’ என அழைக்கப்பட்ட விஜயகாந்த் மறைவுக்கு கட்சி, சினிமாவில் விருப்பு, வெறுப்பின்றி அனைவரும் வந்து அஞ்சலி செலுத்தினர். மேலும், தேமுதிக தொண்டர்கள், பொதுமக்கள் என பலரும் அவரின் பூத உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். 


RIP Vijayakanth: மீளா துயிலில் கலந்தார் விஜயகாந்த் : சந்தனப் பேழைக்குள் அடங்கியது கருப்பு வைரம்




அதேபோன்று தமிழகம் முழுவதும் பட்டி தொட்டி வரை விஜயகாந்த் மறைவிற்கு அவரின் புகைப்படங்களை வைத்து பலராலும் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் வணிகர்கள் விஜயகாந்த் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் காலை 12 மணி வரை கடையடைப்பு செய்வதாக அறிவித்தனர். அதனை அடுத்து இன்று அவர்கள் கடைகளை அடைத்து இரங்கலை வெளிப்படுத்தினர். மயிலாடுதுறை, குத்தாலம், மணல்மேடு பகுதியில் காலை 12 மணிவரை இரண்டு மணிநேரம் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து வணிகர்கள் இரங்கல் தெரிவித்தனர். சீர்காழியில் இரண்டு மணி நேரம் என அறிவித்து காலை 11 மணி வரை கடையப்பு செய்தனர்.


RIP Vijayakanth : "எங்கள் இதயங்களில் நிரந்தரமாக வாழ்வீர்கள் நண்பரே" கேப்டன் விஜயகாந்திற்கு முதலமைச்சர் புகழஞ்சலி!




இதேபோல் மாவட்டத்தில் செம்பனார்கோவில் ஆக்கூர், திருக்கடையூர், தரங்கம்பாடி, பொறையார் பகுதிகளில் மதியம் 2 மணிமுதல் மாலை 5 மணி வரை கடையடைப்பு செய்யது அஞ்சலி செலுத்தினர். இதேபோன்று விஜய்காந்த் மீது உள்ள பற்றால் சீர்காழியில் ஒரு இளைஞர் தனது ரத்தத்தால் விஜயகாந்த் உருவத்தை வரைந்து அஞ்சலி செலுத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சட்டைநாதபுரத்தை சேர்ந்தவர் 26 வயதான இளைஞர் அரவிந்த். இவர் சிறு வயது முதலே ஓவியத்தின் மீது அதிக பற்று கொண்டவர். அதன் காரணமாக ஏராளமான ஓவியங்களை வரைந்து உள்ளார். மேலும் சாக்பீஸில் நுண்சிற்பங்களே வடிவமைப்பதில் கைதேர்ந்தவர்.


Amul Cartoon Vijayakanth : "குட்பை கேப்டன்" : காற்றில் கலந்த விஜயகாந்துக்கு உருக்கமான கார்ட்டூன் வெளியிட்ட அமுல்




மேலும் மறைந்த நடிகரும் தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்தின் மீது தீவிர பற்று கொண்டவர் ஆவார். இந்நிலையில் தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் உயிரிழந்ததை அடுத்து, அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, தனது ரத்தத்தினை சிறிய பாட்டிலில் எடுத்து, அதன் மூலம் விஜயகாந்தின் உருவத்தை மூன்று மணிநேரம் வரைந்து, மறைந்த விஜயகாந்த்க்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். மேலும் இந்த அஞ்சலி நிகழ்வில் அவரது நண்பர்களும் கலந்து கொண்டு விஜயகாந்த்க்கு அஞ்சலி செலுத்தினர். தனது ரத்தத்தால் விஜயகாந்த் உருவத்தை வரைந்து அஞ்சலி செலுத்திய சம்பவம் கேட்பவர்களை நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.


Thalapathy 68: விஜயகாந்த் மறைவால் தள்ளிப்போகும் ‘தளபதி 68’ அப்டேட்... நடிகர் விஜய் எடுத்த முடிவு!