மதுவிலக்கு மாநாட்டிற்கும் கூட்டணிக்கும் எந்த தொடர்பும் கிடையாது. நாங்கள்  அரசியல் கட்சி மட்டும் அல்ல மக்கள் இயக்கம் என தொல்.திருமாவளவன் ஸ்டாலினை நேரில் சந்தித்து தெரிவித்தாக திண்டுக்கல் ஐ.லியோனி கூறியுள்ளார்.


கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டநாதபுரம் பகுதியில் திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா, முப்பெரும் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திமுக மாவட்ட செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா.முருகன் தலைமை வகித்தார். சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம், ஒன்றிய செயலாளர் பிரபாகரன் முன்னிலை வகித்தனர். 




திண்டுக்கல். ஐ.லியோனி பேச்சு


தொடர்ந்து நிகழ்ச்சியில் திமுக கொள்கை பரப்பு செயலாளர் திண்டுக்கல். ஐ.லியோனி கலந்துகொண்டு பேசுகையில், பிரதமர் மோடி நாடு முழுவதும் நான் ஒரு இடங்களில் வெற்றி பெறுவோம் என கூறினார்கள். தமிழ்நாடில் இருபது இடங்களை பிடிப்போம் என்றனர்.  ஒரு இடத்தை கூட பிடிக்க முடியாமல் அவர்களை ஓட ஓட விரட்டியது பெரியாரின் தன்மானமும் சுயமரியாதையும் கொண்ட திமுகவில் ஸ்டாலின் அமைத்த கூட்டணி. இது எப்படி பட்ட கூட்டணி என்றால் 2016 தேர்தலில் மக்கள் நல கூட்டணி என்ற ஒரு கூட்டணி அமைத்து அதிமுக, மக்கள் நல கூட்டணி, திமுக என போட்டியிட்டார்கள். அந்த மக்கள் நல கூட்டணியில் இருந்த தலைவர்களை 2017 -18 -ல் ஸ்டாலினின் அணுகுமுறையால் அனைவரையும் தன்பக்கம் இழுத்து தமிழகத்தில் வெல்லமுயாத கூட்டணியை அமைத்தவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். இந்தியாவிற்கே கூட்டணி அமைத்து கொடுத்தவர் நம் தலைவர். 




2021 -ல் அவர் பிறந்தநாளான மார்ச் 1 -ம் தேதி உத்திரபிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், ஜெஜேஸ்ரீ யாதவ், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரின் பரூக் அப்துல்லா மகன் உமர் அப்துல்லா, காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகா அர்ஜுனா  கார்கே உள்ளிட்டோர் வந்திருந்தனர். மகளிர் உரிமைத் தொகை, மகளிருக்கு இலவச விடியல் பேருந்து ஆகியவற்றை வழங்கி ஒரு பெண்ணை பொருளாதாரத்தில் சுதந்திரமாக நிற்க வைத்த ஆட்சி திமுக ஆட்சி.


ரஜினிகாந்த் புகழாரம்


கலைஞர் போன்று நூற்றாண்டு விழா உலகத்தில் வேறு எந்த தலைவருக்கும் கொண்டாடப்படவில்லை, கலைஞருக்கு வந்த சோதனைக் போல வேறு எந்த தலைவருக்கு வந்திருந்தாலும் அன்றே சாய்ந்து கீழே விழுந்துபார்கள், ஆனால் கலைஞர் என்ற ஆலமரம் சோதனைகளை தாண்டி இன்று ஸ்டாலின் வழியில் ஆட்சி நடக்கிறது என நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தே கூறியுள்ளார். 




மது ஒழிப்பு மாநாடு


கூட்டணியில் உள்ள தலைவர் தொல்.திருமாவளவன் மது ஒழிப்பு மாநாடு நடத்தப்படும் என அறிவித்தார். உடனே ஊடகங்கள் மது ஒழிப்பு மாநாட்டை திருமாவளவன் ஏன் நடத்துகிறார் என்றால் அவர் அதிமுக கூட்டணிக்கு செல்ல தயாராகி விட்டார் என விவாதங்களை நடத்துகின்றன.  இந்தப்பிரச்சினைகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைப்பதை போல் திமுக தலைவர்  ஸ்டாலினை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சந்தித்து, இதற்கும் கூட்டணிக்கும் எந்த தொடர்பும் இல்லை, எங்கள் கட்சி அரசியல் கட்சி மட்டும் இல்லை இது ஒரு மக்கள் இயக்கம், நாங்கள் மக்கள் சக்தியாக இருந்து மது ஒழிப்பு மாநாடு நடத்துகிறோம். திமுகவில் இருந்து யாரேனும் இரண்டு பேரை பேசுவதற்கு அனுப்புங்கள் என்று கேட்டுக் கொண்டார். கூட்டணியை எப்படியேனும் உடைக்க வேண்டும் என சிலர்  கங்கணம் கட்டிக்கொண்டு ஒரு குழு செயல்பட்டு அலைந்து கொண்டிருக்கிறது. திமுக தலைவர் ஸ்டாலின் அமைத்த  வெற்றிக் கூட்டணியை எவராலும் சிதைக்க முடியாது, அழிக்கவும் முடியாது என்றார்.