மயிலாடுதுறை புறநகரில் உள்ள அருள்மிகு செல்வகணபதி ஆலயத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பாபிஷேக விழாவில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.


புறநகர் விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் விழா


மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை புறநகர் கிராமம் ஜிவிஎம் நகர் சந்திப்பில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற அருள்மிகு செல்வ விநாயகர் திருக்கோயில். இவ்வாலயத்தின் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகத் திருவிழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. 


சசிகலா குறித்து இபிஎஸ் அதிரடி! செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ஒற்றை வார்த்தையில் பதில் ..!




திருப்பணிகள் 


முன்னதாக பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பாபிஷேகம் விழா செல்வ விநாயகர் கோயில் செய்ய அப்பகுதி மக்கள் முடிவெடுத்தனர். அதனை தொடர்ந்து அதற்கான பணிகளை தொடங்கி பொதுமக்கள் பங்களிப்புடன் திருப்பணி வேலைகளை செய்து முடித்தனர். திருப்பணிகள் அனைத்தும் நிறைவுற்றதை தொடர்ந்து இன்று மகா கும்பாபிஷேகம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.


ITR 2024: புகைப்படம், முகவரி, தொலைபேசி எண்ணை ஐடி போர்ட்டலில் மாற்றுவது எப்படி? எளிதான வழிமுறை இதோ..!




யாகசாலை பூஜை 


கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கடந்த ஜூன் 14 -ஆம் தேதி விக்னேஷ்வர பூஜையுடன் கும்பாபிஷே விழா துவங்கி, நான்கு கால யாகசாலை பூஜை நடைபெற்றது. தொடர்ந்து இன்று காலை நான்காம் கால யாகசாலை பூஜை நிறைவு பெற்று மகா பூரணாகுதி மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.


பின்னர் யாகசாலை வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீர் அடங்கிய குடங்களை யாகசாலையில் இருந்து சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து மேளதாள வாத்தியங்கள் முழங்க ஆலயத்தை சுற்றி வலம் வந்து கோயில் விமானம் கும்பத்தை அடைந்தனர்.


Job Alert: தேர்வு எதுவும் இல்லை; வேலூரில் வேலை- யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? விவரம்!


தொடர்ந்து விமான கலசத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்கள் முழங்க புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மூலஸ்தான விநாயகருக்கு புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டு நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


Car Features: வேண்டும் ஆனால் அவசியமில்லை - கார்களில் உள்ள 6 முக்கிய அம்சங்கள் இதோ..! விலையும் குறையும்