மயிலாடுதுறை அருகே நீடூரில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு தொழுகையில் 2000 க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் ஒரே இடத்தில் திரண்டு ஈடுபட்ட சிறப்பு தொழுகையில், மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.பி சுதா பங்கேற்று குழந்தைளை தூக்கி கணத்தில் முத்தமிட்டு பக்ரீத் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
பக்ரீத் பண்டிகை
இஸ்லாமிய பண்டிகைகளின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பண்டிகை இன்று நாடு முழுவதும் இஸ்லாமியர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இறைத் தூதர் இப்ராகீம் நபியின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமிய நாட்காட்டியின் பன்னிரண்டாவது மாதமான துல் ஹஜ் மாதம் 10 ஆம் நாள் இவ்விழா கொண்டாடப்படுகின்றது. அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் பக்ரீத் பண்டிகை இஸ்லாமியர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இரண்டாயிரம் பேர் கலந்துக்கொண்டு சிறப்பு தொழுகை
மயிலாடுதுறை அருகே நீடூரில் உள்ள அப்துல் கரீம் ஹஜ்ரத் நினைவரங்கத்தில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு அரபிக் கல்லூரி முதல்வர் முகமது இஸ்மாயில் பாசில் பாக்கவி தலைமையில் அப்துல் காதர் சிறப்பு தொழுகையை நடத்தி வைத்தார். இத்தொழுகையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து கலந்துகொண்டு வாழ்வில் வளமோடு, ஒற்றுமை உணர்வோடும், சிறப்புற்று வாழவும் தொழுகை நடத்தினர். பின்னர், தொழுகை முடிந்ததும் ஒருவருக்கொருவர் கட்டித் ஆரத் தழுவி தங்கள் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
Aavin Milk: நாட்டின் ஒட்டுமொத்த பால் உற்பத்தியிலும் ஆவின் நிறுவனம் மகத்தான சாதனை!
மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் பங்கேற்பு
இச்சிறப்பு பக்ரீத் தொழுகையில் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் எம்பி ஆர்.சுதா கலந்து கொண்டு தொழுகை செய்தார். தொடர்ந்து தொழுகைக்கு வந்திருந்த குழந்தையை தூக்கி கணத்தில் முத்தமிட்டும் இஸ்லாமியர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். இதேபோல் மயிலாடுதுறை அடுத்த சீனிவாசபுரம் பகுதியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் திடலில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
ITR 2024: புகைப்படம், முகவரி, தொலைபேசி எண்ணை ஐடி போர்ட்டலில் மாற்றுவது எப்படி? எளிதான வழிமுறை இதோ..!
இதேபோன்று சீர்காழி, திருமுல்லைவாசல், மேலச்சாலை, கொள்ளிடம், வடகால், வடகரை, அரங்கக்குடி, சங்கரன்பந்தல், ஆக்கூர், நீடூர், கிளியனூர் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிவாசல்களில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடைபெற்றது, இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.