Mayiladuthurai Power Shutdown: மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை (21.12.24) மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.
மின் பாதை பராமரிப்பு பணி
தமிழகத்தில் பராமரிப்பு பணிக்காக மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும். பராமரிப்பு பணிக்காக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அல்லது காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட பகுதியில் மின்சேவை நிறுத்தப்படும். வழக்கமாக காலை 9 அல்லது 10 மணியிலிருந்து மாலை 5 மணிவரை மின்சார பராமரிப்பு பணிகளுக்கான மின்சேவை நிறுத்தம் செய்யப்படும். இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம்.
மயிலாடுதுறை கோட்ட உதவி செயற்பொறியாளர் செய்தி குறிப்பு
அந்தவகையில் தமிழ்நாடு மின் வாரிய மயிலாடுதுறை கோட்ட உதவி செயற் பொறியாளர் அப்துல் வஹாப் மரைக்காயர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது; மயிலாடுதுறை துணை மின்நிலையத்தில் நாளை 21.12.2024 சனிக்கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் மயிலாடுதுறை துணை மின்நிலையத்தில் இருந்து மின்விநியோகம் செய்யப்படும் மின் பாதைகளான மயிலாடுதுறை நகர், மூவலூர், வடகரை,சோழசக்கரநல்லூர், மங்கநல்லூர், ஆனதாண்டவபுரம், வழுவூர், ஆகிய ஊர்களிலும் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களுக்கும் காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இதனை அடுத்து பொதுமக்கள் தங்கள் மின்சாரம் சார்ந்த தேவைகளை முன்னாக திட்டமிட்டு ஏற்படும் சிரமங்களை தவிர்த்துக்கொள்ள அறிவுத்தப்பட்டுள்ளது. மேலும் அன்றைய தினம் மின்நிறுத்தம் செய்வது மின்கட்டமைப்பு மற்றும் இதர காரணங்களை பொறுத்து கடைசி நேர மாறுதலுக்குட்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குத்தாலம், மேக்கிரிமங்கலம் துணை மின் நிலையம்
இதேபோன்று தமிழ்நாடு மின் வாரிய மயிலாடுதுறை கோட்ட குத்தாலம் உதவி செயற் பொறியாளர் அருள்செல்வன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது; மேக்கிரிமங்கலம் துணை மின்நிலையத்தில் நாளை 21.12.2024 சனிக்கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் மயிலாடுதுறை துணை மின்நிலையத்தில் இருந்து மின்விநியோகம் செய்யப்படும் மின் பாதைகளான மேக்கிரிமங்கலம், பழையகூடலூர், கொக்கூர், ஸ்ரீபண்டாரவாடை, திருவாலங்காடு, திருவாவடுதுறை மற்றும் குத்தாலம் துணை மின் நிலையத்தில் இருந்து மின்விதியோகம் செய்யப்படும் பகுதிகள் குத்தாலம் டவுன், குத்தாலம் தேரடி, மாதிரிமங்கலம், சேந்திரபாலபுரம், அரையபுரம், தொழுதாலங்குடி, கீழவெளி ஆகிய ஊர்களிலும் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களுக்கும் காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இதனை அடுத்து பொதுமக்கள் தங்கள் மின்சாரம் சார்ந்த தேவைகளை முன்னாக திட்டமிட்டு ஏற்படும் சிரமங்களை தவிர்த்துக்கொள்ள அறிவுத்தப்பட்டுள்ளது. மேலும் அன்றைய தினம் மின்நிறுத்தம் செய்வது மின்கட்டமைப்பு மற்றும் இதர காரணங்களை பொறுத்து கடைசி நேர மாறுதலுக்குட்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.