மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே மேல காஞ்சிவாய் கிராமத்தில் துக்க நிகழ்வில் பிரியாணி சாப்பிட்ட ஏராளமானோர் வாந்தி, மயக்கம், வயிற்றுவலி அலர்ஜி ஏற்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சம்பவம் மயிலாடுதுறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


காஞ்சிவாய் கிராமத்தில் நடைபெற்ற துக்க நிகழ்வு 


மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா பாலையூர் காவல் எல்லைக்கு உட்பட்டது மேல காஞ்சிவாய் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த விஸ்வநாதன் என்பவரது தாயார் 100 வயதை கடந்த காமாட்சி கடந்த சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து காமாட்சியின் ஈமச்சடங்கு நிகழ்வு நடைபெற்றது.


MP Rahul Gandhi:பாஜக எம்பி.க்கள் எங்களை தடுத்து நிறுத்தினர் - எம்.பி. ராகுல் காந்தி விளக்கம்!




250 பேருக்கு பிரியாணி ஆர்டர் 


இதற்காக திருவாரூர் மாவட்டம் கொல்லுமங்குடியில் இருந்து 250 பேருக்கு பிரியாணி ஆர்டர் செய்து மதிய உணவு வழங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த பிரியாணியை சாப்பிட்ட ஏராளமானோருக்கு வாந்தி, பேதி, வயிற்றுப்போக்கு, வயிற்றுவலி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் பாலையூர், குத்தாலம், திருவாரூர், உள்ளிட்ட பல்வேறு பகுதி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று சென்றுள்ளனர்.


Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!


100 -க்கும் மேற்பட்டோர் பாதிப்பு 


மேலும் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அரசு மருத்துவமனையில் 9 வயது சிறுவன் உள்ளிட்ட 13 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பாதிக்கப்பட்ட நபர்கள் கூறுகையில், பிரியாணி சாப்பிட்ட 100-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று சென்றுள்ளதாகவும், உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். துக்க நிகழ்வில் பிரியாணி சாப்பிட்ட 100 -க்கும் மேற்பட்ட நபர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.