சீர்காழி மின் கோட்டத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணி மேற்கொள்ள உள்ளதால் கீழ்க்கண்ட பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
மாதாந்திர மின் பராமரிப்பு பணி
தமிழகத்தில் பராமரிப்பு பணிக்காக மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும். பராமரிப்பு பணிக்காக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட பகுதியில் மின்சேவை நிறுத்தப்படும். வழக்கமாக காலை 9 அல்லது 10 மணியிலிருந்து மாலை 5 மணிவரை மின்சார பராமரிப்பு பணிகளுக்கான மின்சேவை நிறுத்தம் செய்யப்படும். இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம்.
மின் நிறுத்தம் செய்யப்பட்டு இடங்கள்
அந்தவகையில் மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோயில் துணை மின்நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் சீர்காழி, புங்கனூர், சட்டநாதபுரம், மேலச்சாலை, கதிராமங்லம், ஆத்துக்குடி, திருப்புங்கூர், தென்பாதி, பளமங்கலம், கோவில்பத்து, கொள்ளிடம் முக்கூட்டு, விளத்திட சமுத்திரம் புளிச்சகாடு, கற்பகம் நகம், புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் நாளை டிசம்பர் 11 -ம் தேதி புதன்கிழமை காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளது என இயக்குதலும் மற்றும் பராமரித்தல் செயற்பொறியாளர் வள்ளிமணவான் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து பொதுமக்கள் தங்கள் மின்சாரம் சார்ந்த தேவைகளை முன்னாக திட்டமிட்டு ஏற்படும் சிரமங்களை தவிர்த்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.