Mayiladuthurai Power Shutdown: மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று (04.02.2025) மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பல இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது. 

மாதாந்திர மின் பராமரிப்பு பணி 

தமிழ்நாட்டில் மின்வாரியத்தின் சார்பில் மாதந்தோறும் ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதன் காரணமாக, மாதத்தில் ஒருநாள் மின்தடை செய்யப்படுவது வாடிக்கை. மயிலாடுதுறை மாவட்டத்திலும் ஒவ்வொரு பகுதிகளிலும் மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருகிறது.  மேலும் மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும்.

Watch Video: பிறந்த மேனியாக பிறந்தநாள் கொண்டாடிய எமி ஜாக்சன்! நீங்களே பாருங்க ரசிகர்களே!

மின்நிறுத்த நேரம் 

பராமரிப்பு பணிக்காக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட பகுதியில் மின்சேவை நிறுத்தப்படும். வழக்கமாக காலை 9 அல்லது 10 மணியிலிருந்து மாலை 5 மணிவரை, அல்லது 9 காலை மணி முதல் மதியம் 2 மணிவரை மின்சார பராமரிப்பு பணிகளுக்கான மின்சேவை நிறுத்தம் செய்யப்படும். இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம். 

CM Stalin: மறந்துட்டீங்களா முதல்வரே..! திமுக அரசின் அறிவிப்பால் கொதித்தெழும் மக்கள் - ஸ்டாலின் சொன்ன பொய்?

மயிலாடுதுறை துணை மின்நிலையம்

அந்த வகையில் மயிலாடுதுறை கோட்டத்தில் இன்றையதினம் 04.02.2025 செவ்வாய்கிழமை  மயிலாடுதுறை துணையின் நிலையத்தில் உள்ள 11கிலோ கினியனூர் உழுத்த மின்பாதை பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால், 11 கிலோ கிளியனூர் உயரழுந்த மின்பாதை இருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளில் மின்சாரம் இருக்காது என மயிலாடுதுறை புறநகர் உதவி செயற்பொறியாளர் பாலமுருகன் வெளியீட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

மின்நிறுத்தம் செய்யப்பட்டு இடம் 

பெருஞ்சேரி, எலந்தங்குடி அரிவேலூர், அகரகீரங்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை 9.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை  மின்விநியோகம் இருக்காது.

இதேபோன்று சீர்காழி மின்வாரிய கோட்டத்தில் வைத்தீஸ்வரன் கோயில் துணை மின்நிலையம் மற்றும் எடமணல் துணை மின்நிலையங்களில் அவசரகால பணி மேற்கொள்ளப்படுவதால் இன்றைய தினம் காலை 10 மணியில் இருந்து மதியம் 2 மணிவரை மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது‌.  எடமணல் துணை மின்நிலையங்களில் இருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளான எடமணல், தொடுவாய், திருமுல்லைவாசல், வேட்டங்குடி, கூழையார், கடவாசல், திருகருக்காவூர், திட்டை, செம்மங்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளும் மின்விநியோகம் தடை செய்யப்பட்ட உள்ளது.

PM Modi Loksabha: இன்னைக்கு சம்பவம் உறுதி..! சுத்தி சுத்தி கேள்வி கேட்ட எதிர்க்கட்சிகள், பிரதமர் மோடி மக்களவையில் உரை

மாறுதலுக்கு உட்பட்டது 

மேலும் அன்றையதினம் மின்நிறுத்தம் செய்வது மின்கட்டமைப்பு மற்றும் இதர காரணங்களைப் பொறுத்து கடைசி நேர மாறுதலுக்குட்பட்டலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து பொதுமக்கள் தங்கள் மின்சாரம் சார்ந்த தேவைகளை முன்னாக திட்டமிட்டு ஏற்படும் சிரமங்களை தவிர்த்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.